தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்தியில் முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் குறைந்த இடங்களே கிடைத்துள்ளதை அறிந்து கொண்ட தமுமுக உடனடியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்கிறது. அதன் அடிப்படையில் சில மாற்றங்களை ரோஸ்டர் முறையில் செய்ய வேண்டும் என்ற விபரங்களை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கிறது.

அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களும் கிருத்தவர்களும் அடுத்தடுத்து வர ஏற்பாடுகளை செய்து வருகிறது தமுமுக.
இதை எப்படியோ அறிந்து கொண்ட தறுதலைகள் ஜமாத் தலைவர் வேண்டுமென்றே ஒரு ஸ்டண்ட் அடித்துள்ளார்.
கலக்கல் கேள்விகளுக்கு கலக்கலாக பதில் சொல்லக்கூடியவருக்கு இது கூடவா தெரியாது. தன்னை பின்பற்றக்கூடியவர்களுக்கு 'அறியாமை' எனும் ஷாக் ட்ரீட்டெண்ட்டை கொடுத்துப் பார்த்தார். இதில் அவரின் அடிவருடிகள் யாரும் ஒரு இன்ச் கூட பின்வாங்க வில்லை என்பதையும் எவரும் எதிர் கேள்விகள் கேட்க வில்லை என்பதையும் உணர்ந்து கொண்டு, அந்த ஆட்டு மந்தை கூட்டத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த ஸ்ட்ண்ட் அடிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முழுமுதற் காரணம், தமுமுக நடத்திய 'நன்றி அறிவிப்பு மாநாடு' தான். அது பெரும் எரிச்சலை அவருக்கு உண்டாக்கியுள்ளது. இந்த நன்றி அறிவிப்பு மாநாடு, பிஜே சொல்லி வரும் 'இடஒதுக்கீடு கும்பமேளா'வால் கிடைத்தது என்ற பொய்க்கு சாவு மணி. தமுமுகவின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் அல்லாஹ்வின் உதவியும் தான் 'இட ஒதுக்கீடு' கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும், தமுமுகவின் சமுதாய சேவைகளுக்கு கலைஞர் தந்த அங்கீகாரம் அவர் தனது சொந்தப் பொறுப்பில் தந்த இரண்டு ஆம்புலன்ஸ்களாகும். இந்த நன்றி அறிவிப்பு மாநாட்டால் தனது பலம் குன்றியதாக உணர்ந்த பிஜே தனக்குத் தானே தெம்பு ஏற்றிக் கொள்வதற்காக உலகில் உள்ள அறிவாளிகள் மற்றும் இந்திய அரசு ஊழியர்கள் எல்லோரும் கண்டு, 'கொள்'ளென்று சிரித்து ஏளனம் பேசிக்கூடிய அளவுக்கு நடந்த நாடகம் தான் பிஜேயின் 28.12.2007ல் நடத்திய தமிழக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து விட்டது என்று பிஜே சொன்னால், ஆமாம்! ஆமாம்!! என்று சொல்வதற்கு ஒரு எருமை மாட்டுக் கூட்டத்தை தன்னுடனேயே வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த முறை முஸ்லிம்கள் குறைந்த அளவில் அரசுப்பணிகளில் சேர்க்கப்பட்டிருப்பது போல் தோன்றுவது, பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் ரோஸ்டர் முறையினால் தான் என்பதை விளக்கினாலும் அதை அவர் ஏற்றுக் கொண்டாலும் அவர் எடுத்துள்ள 'மிஷன்' முடியும் வரை விட்டுக் கொடுக்க மாட்டார், அதற்காகவே அவர் 'விருந்துக்கு அழைத்து உணவு பரிமாறப்படுவதை' உதாரணம் காட்டி நாவு சொட்டச் சொட்ட பேசி, ரோஸ்டர் முறையை மறுக்கிறார்.
யார் யார் இந்த முறை விருந்துக்கு வர வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தித்தாளில் விளம்பரம் செய்து அழைத்துவிட்ட பிறகு, அழையா விருந்தாளியாக பிஜே சென்றால் அவர் விருந்தினராக ஆகமாட்டார், விருந்தும் கிடைக்காது. அவர் அடுத்த முறை அழைக்கப்பட்டால் தான் அவர் செல்ல வேண்டும். பொருந்தாத உதாரணத்தை சொல்லி யார் வலியவர்? யார் எளியவர்? என்று பிரித்துப் பார்க்கிறார்.
யார் வலியவர் யார் எளியர் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பிறகு தான் அந்த பட்டியலில் எளியர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். எளியர்கள் பட்டியலில் பிஜே வலியவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.
தமுமுக மார்ச் 7 ல் வரலாற்று சிறப்பு மிக்க பேரணியயை டில்லியில் நடத்தியது என்றால் இடஒதுக்கீடு தமிழகத்தில் தானே வேண்டும் டில்லிக்கு சென்று ஏன் தமுமுக பேரணி நடத்த வேண்டும்? என்று பிஜே கேட்டால் அவரது விசிலடிச்சான் குஞ்சுகள் காட்டுக் கத்து கத்திக் கொண்டு தலையை ஆட்டுகிறது.
மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக வாக்களித்துள்ளது, குறைந்த பட்ச செயல் திட்டத்திலும் இப்படிப்பட்ட இடஒதுக்கீடு தருவோம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி தமுமுக டில்லியில், பிஜே சிறிதும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பேரணியை நடத்தியது.
மத்திய அரசு பணி இடங்களில் தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு தேவை என்று தமுமுக நடத்திய 2004 தஞ்சை பேரணியில் தீர்மானம் ஏற்றப்பட்டது. அதனை நினைவு படுத்தி வேகப்படுத்துவதற்காகத் தான் தமுமுக டில்லியில் பேரணி நடத்தியது. 2004ல் போயஸ் தோட்டத்து பெட்டிகளுக்கு அடிமையாகிப் போய் சமுதாயத்தை கூறுபோட்டு ஓடிப்போன இவருக்கு மத்திய அரசுக்கு நினைவூட்ட வேண்டுமென்று எப்படி நினைவிருக்கும்?
தனது அடிவருடிகளை திருப்திப்படுத்துவதற்காக, 'டில்லிக்குச் சென்று ஏன் பேரணி நடத்த வேண்டும்?' என்ற முட்டாள்தனமான கேள்வியை கேட்டு வைத்துள்ளார். அவரது முட்டாள் குஞ்சுகளும் இதே கேள்வியை கூவிக் கொண்டு திரிகிறார்கள். இப்படித்தான் தனது இருப்பிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நாளை துக்க நாளாக அனுஷ்டித்த பிஜே, தனது அடிவருடிகளை தேற்றும் விதத்தில் பல நாடகங்களை நடத்தினார். அந்த வெட்கங்கெட்ட ஈனத்தனமான அவரது செயல்களை நாம் மறக்க தயாராக இல்லை. அந்த தருணத்தில் அவரது வெப்சைட்டுகளெல்லாம் முகாரி ராகம் பாடிக் கொண்டிருந்தன. பல நாட்களுக்குப் பிறகு தான் அவரது மௌனம் கலைந்தது. 3.5 சதவிகதம் முஸ்லிம்களுக்கு போதாது, இருந்தாலும் பரவாயில்லை என்று அறிக்கை வெளிவந்தது.
இவரது அறிக்கைகள் வெளிவருதற்கு முன்பே அவரது விசிலடிச்சான் குஞ்சுகள் அவரது மௌனத்தை ஒப்புதலாக எடுத்துக் கொண்டு, இடஒதுக்கீடு தந்த தமிழக அரசை திட்டித் தீர்த்தனர். கலைஞர் முஸ்லிம்களை ஏமாற்றி விட்டார் என்று கூவிவரத் துவங்கினார்கள். பிஜேயின் அறிக்கைக்கு பிறகு அடங்கினார்கள். உண்மை என்னவாக இருந்தாலும் பிஜே சொல்வது மட்டும் தான் அவர்களுக்கு வேத வாக்கு. இன்று ஒன்று சொல்வார், அதற்கு நேர்முரணாக நாளை ஒன்று சொல்வார். முதலில் சொல்லியதற்காக கூவிக் கொண்டு கொடி பிடித்த கூட்டம் மறுநாள் அதனை மாற்றிக் கொள்வதற்கு எவ்வித கூச்சமும் படாது. பச்சோந்திகளுக்கு போட்டியாளர்கள் இவர்கள் தான். அறிவாளிகள் விளங்கிக் கொள்வதற்கு ரதிமீனா பஸ் சம்பவம் ஒன்றே போதும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அம்மையாரின் வீட்டிலிருந்து பிஜேயின் வீட்டுக்கு பெட்டிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதால் ஜெயலலிதாவை ஆதரித்து மண்ணைக் கவ்விய பிஜே, என்னுடைய மீசையில் மண்ஒட்டவில்லை பார்த்தீர்களா? என்று வீர வசனம் பேசிக் கொண்டு, 'பார்த்தீர்களா! தான் ஜெயலலிதாவிற்கு ஆதரவு அளித்ததால் கருணாநிதி தேர்தலில் முழு பலத்துடன் அரசு அமைக்க இயலவில்லை' என்று கூறினார். ஆளும் கட்சியாக இருந்த ஜெயலலிதாவை எதிர்கட்சி நிலைக்கு கொண்டு வந்தது தான் உண்மை.
தேர்தல் மேடைகளில் கருணாநிதியை விட மோடி சிறந்தவர் என்றும் கருணாநிதியை அவன் இவன் என்று சிங்கிளில் அழைத்தும் பேசினார்.
இட ஒதுக்கீடு தந்த பின்பு கருணாநிதியை வெட்கமில்லாமல் சந்தித்து நன்றி சொன்னதோடு எதிர்வரும் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை எழுத்து மூலமாகவும் தந்து காலில் விழாத குறையாக திரும்பி வந்தார். இதற்காக வேண்டி அவரது பாலிசியை தளர்த்திக் கொண்டாராம். ஒரு புடலங்காயும் இல்லை, இதுவெல்லாம் இவர் அடிக்கும் ஸ்டண்ட், இறுதியில் பெட்டி விசுவாசத்திற்காக ஜெயலலிதாவே சரணம். விசிலடிச்சான் ததஜ குஞ்சுகளுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக சில பல நேரங்களில் ஜெயலலிதாவை எதிர்ப்பது போல் நடித்தும் கொள்வார், ஒப்பந்தப்படி இவற்றையெல்லாம் ஜெயலலிதா கண்டு கொள்ள மாட்டார்.
அது சரி, பிறகு ஏன் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும்? ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஏன் பாலிசியை தளர்த்திக் கொள்ள வேண்டும்? நன்றாகவே தெரிகிறது ஜெயலலிதா சுத்த ஃபிராடு, இடஒதுக்கீடு தருவதாகவும் பிஜேபியுடன் கூட்டு வைக்க மாட்டேன் என்றும் கூறி முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அந்த இரண்டையுமே மீறியவர். அப்படிப்பட்டவர் எப்படி இடஒதுக்கீடு தருவார்? ஆணையம் போட்டு விட்டார் என்பதற்காக சென்று பார்த்தோம், அதுவும் பாலிசியை தளர்த்திக் கொண்டு சென்று பார்த்தோம் என்று பிஜே சொல்வது சுத்தப் பொய். ஜெயலலிதா ஆணையத்தை புதிதாக ஒன்றும் போட வில்லை, ஏற்கனவே இருந்த ஆணையம் காலாவதியானதால் அதனை புதுப்பித்தார். அது தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிப்பு செய்த பிறகு அதனை புதுப்பித்தார், அது இன்றளவிலும் சர்ச்சையில் இருந்து கொண்டிருக்கிறது. விண்டிவியை விட்டுக் கொடுத்ததற்காக சில கோடிகளும், கும்பமேளாவை நடத்துவதற்காக சில கோடிகளும், தேர்தல் பணியாற்றுவதற்காக சில கோடிகளும், தமிழகத்து முஸ்லிம்களை ஜெயலலிதாவிடம் அடகு வைத்ததற்காக சில கோடிகளும் பிஜேயின் பாக்கெட்டுக்கு வந்து விட்டதால், திருடனைக் கொட்டிய தேள் போல படு உஷாராக நடந்து கொண்டார். பணப்பட்டுவாடா நடந்த விபரங்களை அரசு அதிகாரிகளே ஒத்துக் கொள்கிறார்கள்.
எதிர்வரும் காலங்களில் அவரது பாலிசியை தளர்த்திக் கொண்டு தேர்தலில் நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்கு, 'தமுமுக சரியில்லை, அதனால் தான் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்' என்று காரணம் கூறினால் போதும், அவரது குஞ்சுகள் வேகமாக தலையை ஆட்டுவார்கள்.
இதில் தமாசு என்னவென்றால் கருணாநிதியின் மகள் கனிமொழி மூலமாக கலைஞருக்கு எழுதிய கடித்தினால் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது என்ற புரூடாவை சேர்த்தே கட்டவிழ்த்து விட்டது தான்.
இதன் பிறகு தான் ததஜவினரின் கவிழ்ந்த தலை நிமிரத் துவங்கியது.
இப்பொழுதெல்லாம் ஜெயலலிதாவின் வீட்டுத் தோட்டத்திலிருந்து பிஜேயின் வீடு வரை ஒரு நிரந்தர பணப் 'பைப்' போடப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் 28.12.2007 ல் நடைபெற்ற கண்டனப் பேரணியும் அதில் கருணாநிதிக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தை மறு பரிசீனை செய்யப் போவதாக அறிவித்த அறிவிப்பும் என்று மக்கள் பரவலாக பேசிக் கொள்கிறார்கள்.
முஸ்லிம்களை அடகு வைத்து கோடி கோடியாக பெட்டி வாங்கிய ஒரே அயோக்கியர் முஸ்லிம் சமுதாயத்தில் பிஜே ஒருவராகத் தான் இருக்க முடியும். 'எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது' என்ற இவரது தத்துவத்தை அப்படியே நடைமுறைக்கு கொண்டு வந்தவர் இவர் ஒருவர் தான்.
அரசியல் அயோக்கியர்கள் எல்லாம் இவரிடத்தில் அரசியல் பாடம் படித்துக் கொள்ள வேண்டும், இந்த லட்சணத்தில் 'நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல' என்ற அடைமொழி வேறு. அவர் எந்த நிலையில் இருகிறார் என்பதை இது போன்ற வார்த்தைகளால் சொல்லிக் கொள்வதுண்டு இவர். 'எங்கப்பன் குதுருக்குள் இல்லை' என்ற பழமொழி இவர் விஷயத்தில் நன்றாகவே பொருந்துகிறது பாருங்கள்.
இவரது கண்டனப் பேருரையின் ஆரம்பத்தில் கருணாநிதி முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் இழைத்து விட்டதாகவும் அதற்கு ஆதாரமாக இருப்பது தனது கைகளில் உள்ள பேப்பர் கட்டிங்குகள் என்றும் கூறியவர், இறுதியில் ரோஸ்டர் முறையை பற்றி பேசுகிறார். கருணாநிதியின் துரோகத்தைப் பற்றி பேசினால் ரோஸ்டர் முறையை பற்றி பேசியிருக்கக் கூடாது. ரோஸ்டர் முறையை பற்றி பேசினால் கருணாநிதியின் துரோகத்தை பற்றி பேசியிருக்கக் கூடாது ஏனென்றால் இரண்டும் அவரது பார்வையில் எதிர்மறையான விஷயங்கள். எதிரெதிரான இரண்டையும் பற்றி பேசிவிட்டு திணாவட்டில் திரிகிறவர் தான் இவர். நம்மைப் பொருத்த வரை முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 சதவிகித இடஒதுக்கீட்டு உரிமைகளை எந்த விதத்திலும் பறிக்காத தமிழக அரசை கண்டித்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தால் எந்த பாதிப்பும் அரசுக்கு ஏற்படப் போவதில்லை, வரும் காலங்களில் இது போன்ற அர்த்தமற்ற போராட்டங்களால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட இவர் காரணமாக அமைந்து விடுவாரோ என்ற அச்சமும் எம்முள் இருக்கிறது. போராட்டம் என்பது விளையாட்டுக் காரியமா?
நாம் அறிந்த வரை தமிழகத்தில் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும் இதே ரோஸ்டர் முறைதான் நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கையை பொருத்து இப்பொழுது கிடைத்தவர்களுக்கு அடுத்த முறை கிடைக்காது, அடுத்த முறை கிடைத்தவர்களுக்கு அதற்கு அடுத்த முறை கிடைக்காது.
தமுமுக கொண்டுவர நினைக்கும் ரோஸ்டர் மாற்றத்தால் இரண்டு சமூகங்களுக்கு கிடைத்த பணியாளர் நியமனங்களை ஒத்துப் பார்ப்பதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர, அந்த மாற்றத்திற்கு பிறகும் இரு சமூகங்களுக்கும் கூடுதல் குறைவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
பிஜேயின் கண்டனப் பேருரையில் கர்ப்பிணிப் பெண்கள் கூட கால் கடுக்க கும்பமேளாவில் நடந்து வந்ததை குறிப்பிட்டார். அடப்பாவிகளா! முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு அளவே இல்லையா? ஒரு காலத்தில் இஸ்லாத்தை தூய முறையில் மக்களுக்கு எடுத்து வைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நம்பி அவர் சொல்வது எல்லாம் சத்தியம் என்று நம்பிக் கொண்டு அவர் பின்னால் செல்லக்கூடியவர்களை வைத்து அரசியல் வியாபாரமே நடத்துகிறார். அவரின் பின்ணணியை இதற்குப் பிறகுமா விளங்கிக் கொள்ள முடியவில்லை.
பிஜேக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் சேர்த்து விலை பேசப்பட்டு ஜெயலலிதாவிடம் என்றைக்கோ விற்றுவிட்டார். அதற்காகத்தான் பத்து லட்சம் பேர் கலந்து கொண்டார்கள் என்று காதில் பூ வைத்த மக்களிடமும் காதில் பூ வைக்க முடியாத ஜெயலலிதாவிடம் ஒரு லட்சம் என்றும் கூறினார்.
மொதத்தில் பிஜேயின் ஒவ்வொரு அசைவையும் அளந்து சரியாக புரிந்து கொள்ளும் மக்களின் உதவியை ஒவ்வொருவரும் நாடுவது எல்லோருக்கும் பயன் தரும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையையும் பொய்யையும் பிரித்து அறியும் சக்தியை தருவானாக.
வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா 31.12.2007