Thursday, May 24, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 16

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. .. )

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். ஒங்களத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்.

நீங்க தான கடலூர் மாவட்ட ததஜ விஷயமா விரிவா சொல்றேன்னு சொன்னீங்களே மறந்துட்டீங்களா.

சே...சே. மறக்கலாம் இல்ல. ஆனா அதுதான பழய மேட்டரா போச்சே. கடலூர் மாவட்ட முன்னாள் ததஜ நிர்வாகிகளோட லெட்டரே வலைல விரிஞ்சு கெடக்கே.

ஆமாமா. நானும் பார்த்தேன். சப்சாடா எல்லா வெ வரத்தையும் புட்டு புட்டு வச்சுருக்காங்களே.

ஆனாலும் அஹமது, நம்ம தலவரு இருந்தாலும் இப்புடி எளக்காரமா எளுதி இருக்கக் கூடாதுன்னு தான் நான் நெனக்கிறேன்.

இது என்ன புது கூத்தா.. .. யாரப்பத்தி என்ன எளுதி இருக்காரு ஒமர் பாய்... ..

இப்போ அவருக்கு மொத எதிரியே கடலூர் மாவட்ட முன்னாள் ததஜ தலைவர் தான. அவரப் பத்தி கேவலமாக, அவரு ஒரு செவிடரு அதுனால நாஞ் சொன்னத சரியா வெளங்கிக்கலன்னு எளுதியிருக்காரு.

அடப்பாவமே. அந்த கொறயோட கடந்த இரண்டு வருஷத்துக்கு மேலா அவரு இந்த வீணாப்போன ததஜவுக்காக எவ்வளவு ஒழைச்சாரு. அவரு இவருக்காக வசூல் பண்றபோதுலாம் தெரியாதது இப்பத்தான தெரிஞ்சுதாக்கும்.

அடப்போங்க அஹமது. நம்ம தலைவரு பாணியே இது தான. எப்போ அவருக்கு புடிக்கலியோ அப்போ மத்தவங்களயெல்லாம் இப்புடி என்னமாவது ஒரு கொறய சொல்லித்தான மட்டம் தட்டுவாரு. அல்லது இவராவே எதாவது பட்டம் சூட்டி விட்டுடவாரு.

அட ஆமாங்க ஒமரு. இதுக்கு முன்னால அபூஅப்துல்லாட்ட இருந்து வெலகும் போது அவர மற கழண்டவருன்னு சொன்னாரு. ஃபளுலுல் இலாஹிய கட்டம் கட்டும் போது திருடன்னு சொன்னாரு. இப்புடி ஒரு ஒருத்தரையும் என்னமாவது சொல்றது வாடிக்கை தானே.

இவுங்கள மட்டுமா சொன்னாரு. யூசுப் அல் கர்ளாவியவே லூசுப்பயன்னு சொன்னாரே.

ஆமா இவரு சஹாபாக்களயே மதிக்கல, சஹாபாக்களயே கிரிமினல்னும், கொலகாரன்னும் சொன்னவர்தானே. இவரு கடலூர் மாவட்ட தலைவர செவிடன்னு சொல்றதெல்லாம் இவருக்கு சகஜமான ஒண்ணுதான்.

நாம சொல்லியா அவரு இத மாத்திக்கப் போறாரு. வுடுங்க அஹமது. எனக்கென்ன சந்தேகம்னா, பாக்கர கழட்டி வுட சமயம் பார்த்து அடிச்சவரு, பாக்கர் அடிச்ச பதிலடில சரண்டராகி வுளந்துட்டார்ன்னு தான் நெனக்கிறேன்.

எப்புடிச் சொல்றீங்க ஒமர் பாய்.

அதாவது அஹமது, பாக்கர் நந்தினியோட தனிக்குடித்தனமே நடத்துனது தனக்குத் தெரியும்னு ஒத்துக்கிட்ட பிஜே ஏன் அதுக்கு நடவடிக்க எடுக்கல.

என்னது, பாக்கரு நந்தினியோட குடித்தனம் நடத்துனாரா. அந்தப் பொண்ணு இஸ்லாத்துக்கு வந்துச்சா வரலியா, இவரு கண்ணாலம் கட்டுனாரா இல்லியா.

அட என்ன அஹமது. இப்புடி கல்யாணம் பண்ணித்தான் சேரணும்னு யாரு சொன்னா. இரண்டு பேரும் விரும்புனா சேர்ந்துக்கலாம்ல.

என்ன ஒமர் பாய். புதுப்புது குண்டா போடுறீங்க. இத யாரு சொன்னது.

திருவாளர் (டு)பாக்கர் தான். இவரு இப்புடிச் சொல்றாரேன்னு பெண்கள் கல்லூரி ஆலிமாட்ட அந்த பொண்ணு கேட்டுச்சாம். ஆலிமா வெலவெலத்துப்போய் அல்லாமாட்ட கேட்டாங்களாம். பிரச்சன பாக்கரப் பத்துனதுனால அல்லாமா சிரிச்சுட்டு போயிட்டாராம். இதயும் அல்லாமா பிஜேவே கடலூர்காரங்கள்ட்ட சொல்லியிருக்காரு.

அட வெக்கக்கேடே. அப்ப தனிக்குடித்தனம் நடத்தும் போதுலாம் அனுமதிச்சவரு, பஸ்ஸுல போனதுக்கு மட்டும் அதிரடி ஆக்சனா.

நீங்க வேற, கன்னியாகுமரி மாவட்ட நிர்வகிங்க சத்தம் போட்டதுனால தான் ராஜினாமா செய்யச் சொன்னோம்னு தலவரு சொல்லியிருக்காரே.

கன்னியாகுமரி ஆளுங்க கேட்டதுக்காக ஆக் ஷன் எடுத்தவரு அப்புறம் எதுக்கு பேக் அடிச்சாரு.

அது அதவிட பெரிய கூத்து. மதுரக்காரங்க வந்து பாக்கருக்கு மறுபடியும் பதவி குடுத்தே ஆகணும்னு அடம் புடிச்சதுனால மறுபடியும் பதவி குடுத்துட்டாங்களாம்.

அடப்போங்க ஒமர் பாய். கேக்கவே தல சுத்துது, யாரோ மிரட்டுனதுனால ஆக் ஷன் அப்புறம் வேற யாரோ மிரட்டுனதுனால ஆன்டி கிளைமாக்ஸ் இப்புடி வேற எந்த அரசியல் கட்சியில கூட நடக்காதுன்னு நெனக்கிறேன். அரசியல் கட்சிகள விட நம்மளோடது ரொம்ப கேவலமாய் போச்சு போங்க.

அடப்போங்க அஹமது. அவன் கேட்டான் ஆக் ஷன் எடுத்தேன் இவங்கேட்டான் மாத்திட்டேன்னு அவரு சொல்றத எல்லாம் அப்புடியே நம்புறீங்களா நீங்க. பரிதாபம் போங்க. நாங் கேக்குறேன். சும்மா மெரட்டுனதுக்கே ஆக் ஷனும், அப்புறம் பதவியும் குடுத்ததா சொல்றாரே. ஆனா மறுபடியும் பதவி குடுத்ததுக்காக ஒரு மாவட்ட நிர்வாகமே விலகியிருக்கே அல்லது விலக்கப்பட்டிருக்கே இந்த நடவடிக்கை ஏன் கன்னியாகுமரியிலோ அல்லது மதுரைக்கோ எடுக்கல.. .. ..

அட ஆமா ஏன் அவுங்க மேல தலைமையின் முடிவ ஏத்துக்காததுக்காக நடவடிக்கை எடுக்கல.

சும்மா தமாசு பண்ணாதீங்க அஹமது. எல்லாமே செட்டப்பு. தனிக்குடித்தனம் நடத்துறது தெரிஞ்சும் நடவடிக்க எடுக்காம, பஸ்ஸுல போனதுக்காக நடவடிக்கங்குறதே சும்மா அவர களட்டி வுடுறதுக்கு சான்ஸ் பாத்து செஞ்சது தான்.

அப்புறம் எப்படி மதுரக்காரங்க கேட்டதுனால திரும்ப பதவி குடுத்ததா சொல்லியிருக்காரு.

என்ன செய்றது அஹமது. பாக்கரு துபாய் போய் பீஜேவோட வண்டவாளத்த எல்லாம் தண்டவாளத்துல ஏத்த ஆரம்புச்சப்பறம் வேற வழியில்லாம பாக்கருக்கு பதவி குடுத்திருக்காரு. அதுக்கு சப்போட்டுக்குத் தான் மதுரக்காரங்க கேட்டாங்கன்னு சொல்றதுலாம்.

யார் யாரோ அரசியல்வாதிங்கன்னு அபாண்டமா சொன்ன இவரு பண்ற அரசியல் தாங்க முடியலியே.

தாங்க முடியாமத்தான் கடலூர் மாவட்டகாரங்க களண்டுகிட்டாங்க.

ஆமா ஒமர் பாய் எனக்கு ஒரு சந்தேகம். கடலூர்கார சகோதரர்கள் கேட்ட அளவுக்குக்கூட நம்ம கட்சியில உள்ள மவ்லவிகள் எதுவுமே கேக்க மாட்டாங்களோ.

யாரச் சொல்றீங்க. ஜகாத் ஆய்வு குழு புகழ் மவ்லவிகள் கூட்டத்தையா கேக்குறீங்க.

அட நல்ல டைட்டிலா இருக்கே. அந்த ஆய்வு குழு மட்டுமல்லாமல், இன்னும் எத்தனயோ பேரு மவ்லவி பட்டமும் வாங்கி சுத்தி இருக்காங்களே அவுங்களத்தான் கேக்குறேன்.

அவுங்கள்லாம் எப்படி அண்ணன எதுத்து கேப்பாங்க. சம்பளம் குடுக்குற முதலாளிய எதுத்து எந்த தொழிலாளியாவது கேள்வி கேப்பானா. கேள்வி கேட்டா சீட்டு கிழிஞ்சுடும். சம்பளம் போயிடும். அதுதான் பயம்.

கிளிஞ்சுது போங்க.

வர்றேன் வஸ்ஸலாம்

முல்லா

Sunday, May 20, 2007

மீண்டும் ததஜவின் வசூல் வேட்டை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..



ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது தமிழ் முதுமொழி.
அதைப்போலத் தான், ஆன்மீகவாதியின் வசூலும்.

நவீன ஆன்மீகவாதியான மற்றவர்களை சுரண்டியே பிழைத்துவரும் பீஜே தனது வசூல் வேட்டையை மீண்டும் துவக்கி விட்டார்.

உள்ளூரில் கடலூர் சகோதரர்களைப் போல பலரும் விழிப்படைந்து விட்டதால், இன்னமும் விழி திறந்தும் மயக்கத்திலுள்ள, வளைகுடாவாசிகளை குறி வைத்து களம் இறங்கியுள்ளார். ஏகத்துவ பிரச்சாரம் என்பதே சுடர் விட்டு பிரகாசித்து தனது வீச்சை தமிழகம் முழுமையும் பரப்பியதில் பெரும் பங்கு வகித்த வளைகுடாவில் தவ்ஹீதின் பெயரால் தக்லீதை திணிக்க முயலும் சில தறுதலைகளைக் கொண்டு தனது இறுதிகட்ட ஏற்பாட்டில் பித்தலாட்ட பீஜே இறங்கி விட்டார்.

சமீப காலத்தில் தனது வலைத்தளத்திலே எல்லாவித யுக்திகளையும் உபயோகித்து ஒரு வேண்டுகோளை திரையிட்டுள்ளார்.

இதனை ஏன் இறுதிகட்ட ஏற்பாடு என்று சொல்ல வேண்டியுள்ளதென்றால், அவர் வைத்துள்ள கோரிக்கை நமக்கு 2002 இல் தமுமுக பெயரில் அவர் வெளியிட்ட வேண்டுகோளை நினைவுபடுத்துகிறது.

அன்றும் அப்படித்தான், தமுமுகவிற்கு நிரந்தர கட்டிடம் வேண்டுமென்று விண்ணப்பம் எழுதினார். சிரமப்பட்டு சகோதரர்கள் சேகரித்த பொருளாதாரத்தை சிந்தாமல் சுவைப்பதற்காக ட்ரஸ்ட் தலைமையேற்றார். 2004 இல் அத்தனையையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டிவிட்டார். மேலதிக விபரங்களுக்கு முன்னர் வலையில் கிடைத்த ஆதாரம் இதோ.

http://muthupettai.googlepages.com/dmm_1.jpg

http://muthupettai.googlepages.com/dmm_2.jpg

நன்றி: www.pjvstmmk.com

எனவே தான் எச்சரிக்கிறோம்.

விட்டில் பூச்சிகளாய் விழுந்து கிடக்கும், எஞ்சியிருக்கும் ததஜ சகோதரர்களே விழித்துக் கொள்ளுங்கள். அன்று தமுமுகவிலாவது பிஜேயை கேள்வி கேட்கும் திராணியும் தெம்பும் இருந்தது. எனவே தான் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடியவர் தான் என்பதனை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்.

உங்களின் உறுதுணையுடன் கிடைக்கும் பொருளாதாரத்தை தனதாக்கிக் கொள்ளும் தந்திரம் நடைபெற்று வருகிறது. கடலூரில் ஏற்பட்ட விழிப்புணர்வு எல்லா பக்கங்களிலும் பரவுவதற்கு முன்பாக கிடைத்ததை சுருட்ட திட்டமிட்டுள்ளார். பொருளாதாரம் சோந்த பின் பாக்கரின் பாலியல் அத்துமீறல்கள் போல வேறு எந்த விஷயத்திற்காக எவர் கேள்வி எழுப்பினாலும் கேட்பவர்களுக்கு எக்ஸிட் தான் பரிசு.

ஒருவேளை அனைத்து சகோதரர்களும் விழிப்புணர்வு பெற்று விட்டால் அதுவும் வசதிதான். அனைவரையும் வெளியாக்கி விட்டு கிடைத்ததோடு செட்டில் ஆகிக் கொள்ளலாம் அல்லவா. சமுதாயமே! ததஜ சகோதரர்களே விழித்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கிறோம்.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 21.05.2007

Monday, May 14, 2007

டில்லி பேரணியின் அதிர்வலைகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழக எல்லையைத் தாண்டிச் சென்று, தலைநகர் டில்லியிலே ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து 07.03.2007 ல் வரலாறு படைத்தது.

தமுமுகவின் மார்ச் 7 டில்லிப் பேரணியில் மக்கள்

தன்னால் முடியாததை எவர் செய்தாலும் தவறு என்று எண்ணும் உயர் (?) குணம் படைத்த சிலரால், 'டில்லி பேரணி' க்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டதிலிருந்து இன்று வரை முன் வைக்கப்படும் சில முக்கியமான கேள்வி..

'டில்லிக்குச் சென்று, மிகப்பெரும் பொருளாதாரத்தை விரயம் செய்து போராட வேண்டுமா? மாநிலத் தலைநகர் சென்னையிலே ஏன் இப்போராட்டத்தை நட்த்தவில்லை? கருணாநிதியை பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காகவா?'

இவையும், இவற்றைச் சார்ந்தும், ஒட்டியும் பல துணைக் கேள்விகளையும் உலவ விட்டுள்ளனர்.

போலி ஆன்மீக அரசியல் குருவாக அவதாரம் எடுத்து உலவி வரும் அபூஷைத்தான் மூலம் பரப்பப்பட்டு வரும் இந்த வைரசுக்கு ஒரு சில படித்தவர்களே பலியாகும் போது பாமரர்களின் நிலை என்னவாகும் என்ற கவலையில் சில தகவல்களை பட்டியலிட விழைகிறேன்.

முதலில், இத்தகைய சந்தேகங்களை கிளப்பி அதன் மூலம் தனது கொள்ளைகளை மறைக்க முயலும் போலி ஆன்மீக அரசியல் குருவின் அருகதையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில், மார்ச் - 07 பேரணியை திட்டமிட்ட சமயத்திலாவது இது போல எழுப்பப்படும் சந்தேகங்கள் ஓரளவாவது சமுதாய அக்கறையோடு சம்பந்தப்பட்டிருந்திருக்கும். ஆனால், இன்றோ, மார்ச் - 07 பேரணி ஏற்படுத்திய தாக்கத்தையும், வீரியத்தையும், அப்பேரணியினால் ஏற்பட்ட அகில இந்திய முஸ்லிம் இயக்கங்களின் ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் கண்ணார கண்டு வாயார வாழ்த்தும் நெஞ்சங்களையும், வாயடைத்துப் போன இஸ்லாமிய எதிரிகளையும் கண்ட பின்பும் இக்கேள்விகள் முன் வைக்கப்படுவதால் சில தகவல்களை இச்சமுதாயத்திற்கு அவசியம் தெரிவித்தாக வேண்டியுள்ளது.

இன்று பொருளாதார விரயம் என்று புலம்புபவர்கள், உண்மையில் ஒரு இலட்சம் பேர் கூட கூடாத கும்பமேளாவிற்காக பட்டி தொட்டி எங்கும் டிஜிட்டல் பேனர் கட்டி வைத்தார்களே அது தான் உண்மையான வீண் விரயம். ஆனால் டில்லிக்குச் சென்ற சகோதரன் ஒவ்வொருவரும் செலவழித்தார்களே அது விரயமல்ல. மாறாக முதலீடு. ஆம் மறுமைக்கான முதலீடு. இந்த சமுதாயத்தை சீர் தூக்கி விட செலவிடப்பட்ட பொருளாதாரத்திற்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி மறுமையில் உண்டு என உணர்ந்து தனது உரிமைகளுக்காக செலவிட்ட தொகைக்கு உரிய வெகுமதியை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

மேலும், சுனாமியில் தனது செல்வங்களை இழந்தவர்களுக்கான இழப்பீடு என வசூல் செய்து தனது இயக்க குண்டர் (தொண்டர்)களுக்கு சீருடைக்காகவும், தான் திருடிக் கொண்டு வந்த பத்திரிக்கையின் நஷ்டத்தை ஈடுகட்ட இரண்டு இலட்ச ரூபாய்களுக்கு மேல் சுரட்டிக் கொண்ட விஷயம் அமுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், முன் வைக்கப்படும் சொத்தை வாதங்கள் தான் டில்லி பேரணி குறித்த கேள்விகள் என்பதனை சமுதாயம் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

பேரணிக்கான ஏற்பாடுகள் முறையாக துவங்கப்பட்ட பொழுதே, சமுதாய சொந்தங்களின் மனதில் இந்த சந்தேக விதை தூவப்படுவதை அறிந்த தமுமுக, அதனை முளையிலேயே கிள்ளி எறியும் வண்ணம் அப்பொழுதே அருமையான பதிலைத் தந்தது.

மந்திரித்து விடப்பட்ட சிலர் அதனை அறிந்து கொள்ள வில்லை போலும். அதனால் தான் மீண்டும் அதே கேள்வியை முன் வைக்கின்றனர். அவர்களுக்காக தமுமுக தந்த பதில் இதோ:

'மாநில அளவில் இட ஒதுக்கீடு சாத்தியமானதாக இருந்தாலும், எதிர்கால பாதுகாப்பு கருதி சட்டபூர்வமாக ஆக்குவதற்காகவும், மத்திய அரசு பணிகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதனை வலியுறுத்துவதற்காகவும் பேரணியை இந்திய தலைநகர் டில்லியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது'.

டில்லி பேரணியின் ஏற்பாட்டு அளவிலேயே இந்த பதிலை தமிழக முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டது என்பதனைத்தான் டில்லிக்கு வந்து குழுமிய தமிழகத்தின் 7,000 களப்போராளிகள் நிரூபித்தனர். இதுவே தமுமுகவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். தமிழக மக்களின் இத்தகைய பேராதரவிற்கு மேலும் ஒரு காரணம் இருப்பதாகவே நாம் எண்ணுகிறோம். அது என்னவெனில்,

மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து, ஆட்சியில் அமர்த்தியதோடு நில்லாமல் தொடர்ந்து வலியுறுத்தி முஸ்லிம்களின் நிலைபற்றி ஆராய சச்சார் கமிட்டி அமைய பெரும் உந்துசக்தியாக இருந்த தமுமுக, மேலும் மேலும் அரசை வலியுறுத்தி அக்கமிட்டியின் பரிந்துரைகளை செயலாக்கத்தில் கொண்டு வரவும் பாடுபட வேண்டுமென தமிழக முஸ்லிம்கள் விரும்புகின்றனர். எனவே இத்தகைய பொறுப்பையும் தமுமுக ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று இந்திய முஸ்லிம் கட்சிகளை (அ) இயக்கங்களை ஒன்றுபடுத்தும் சக்தியும் திறமையும் தமுமுகவிற்கே உள்ளது என்பதனை டில்லி பேரணி நிரூபித்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆக, சமுதாயத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படும் தமுமுக ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையே இதுபோன்ற விமரிசனங்கள் வெளிப்படுத்துகின்றன. என்றாலும் சமுதாயம் சரியான தலைமையை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளது.

இதற்கு மேலும் மயக்கத்திலிருப்பவர்களின் பித்தம் தெளிய பிரார்த்திக்கிறோம்.

வஸ்ஸலாம் - ராவுத்தர் 15.05.2007

Saturday, May 12, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 15

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர் பாய் என்ன இவ்வளவு சுருக்கா வந்திட்டீங்க.
என்னங்க அஹமது. வரலைன்னாலும் கோவிச்சுக்கிறீங்க. வந்தாலும் சலிச்சுக்கிறீங்க.

சரி சரி ஒமர் பாய் ஒங்க வேலய ஆரம்பிங்க.

என்னத்தங்க அஹமது ஆரம்பிக்கிறது. நம்மாளுங்க தான் வக்பு வாரிய விஷயத்தை ஆரம்பிச்சுட்டு முடிக்க முடியாம எளுதிகிட்டு இருக்காங்களே.

ஓ. இன்னைக்கு வக்ப்லயே ஆரம்பிக்கலாம்ங்கிறீங்க. என்னங்க செய்யுறது நாம ஆரமிச்ச அம்மா மண்ண கவ்விட்டாங்க. அவுங்கள்ட்ட பெட்டி வாங்குன விசுவாசத்துக்காக இடஒதுக்கீடு விஷயத்துல அம்மா ஆர்டரே போட்டா மாதிரி அலப்பற பண்ணுனோம். ஒருவேள ஜெயிச்சுருந்தா அத வச்சே என்னவாச்சும் வாங்கியிருக்கலாம். இப்ப என்ன பண்ண முடியும். அடுத்தவன பார்த்து வயிறு எரியத்தான முடியும்.

அதுக்காக இப்புடியா. போறபோக்குல பாத்தா வயிறே தீஞ்சுடும் போல இருக்கே.

சரி இப்ப என்ன எளுதிட்டாங்கன்னு சொல்ல வந்துட்டீங்க.

இதுவர அந்த பதவிக்கு வந்தவங்க யாரும் இவர மாதிரி கூட்டங்கள் நடத்தலயாம்.

அடப்பாவமே. அப்ப என்ன மத்தவங்க மாதிரி இவரும் செயல்படாம இருக்கணும்கிறாங்களா எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் இந்த பொறுப்புக்கு மக்களோட தொடர்பு வச்சுருக்கிற யாரும் வந்ததா தெரியல. இதுவரைக்கும் இருந்தவங்கள்ளாம் அந்தந்த கட்சி தலைவருங்களுக்கு மட்டும் தெரிஞ்ச ஆளா இருப்பாரு. அதுனால அவர யாரும் கண்டுக்க மாட்டாங்க. அவரும் யாரையும் கண்டுக்க மாட்டாரு. அவரவர் பாணியில் வக்ப் சொத்த சாப்டுட்டுப் போயிருவாங்க. இப்பத்தான் முதல் முறையா மக்களோடு தொடர்புள்ள ஒருத்தரு வந்துருக்காரு. மத்தவங்க மாதிரி பாராட்டுக்கூட்டம் போடலன்னாலும் பேசாம இருந்துட்டுப் போலாமே. இப்புடியெல்லாம் எளுதுனா அப்புறமா நம்மள எவனுமே கண்டுக்க மாட்டான்.

பரவாயில்லையே. அஹமது பாய் இப்போ நீங்களும் வௌரமா பேச ஆரம்புச்சுட்டீங்கலே. ஆனா நம்ம அண்ணன் அவ்வளவு வௌரமில்லாதவரா. அவரு நெனக்கிறத எல்லாம் வேற யாரோ வாசகன் எளுதுனாமாதிரி வாசகர் கடிதத்துலயோ அல்லது கேள்வி பதில்லயோ தானே போடுவாரு. அப்புறமா அத மாத்திகலாம்ல.

அடப்போங்க. ஒமர் பாய். என்னமோ அண்ணன் கொள்கைல உறுதியா நிக்கிற மாதிரில பேசுறீங்க. தமுமுகவுலயிருந்து வெளியேறுனதுல இருந்து எத்தன விஷயத்த எத்தன பேர்ட்ட எத்தன எடங்கள்ள மாத்தி மாத்தி பேசுனாருன்னு ஒங்களுக்கு மறந்து போச்சா.

சரி அத வுடுங்க. இப்ப கவிஞர் சல்மாவ நம்மாளுங்க சப்போர்ட் பண்ண ஆரம்புச்சுட்டாங்க தெரியுமா.

அது சரி. எந்த விஷயத்துக்காக.

எல்லாம் வாரியம் விஷயமாத்தான். சல்மாவுக்கு வாரியம் கெடச்சுருக்காம். ஆனா அவுங்க ஒண்ணும் கூட்டம்லாம் போடாம அமைதியாக பணி செய்றாங்களாம்.

ஏன் ஒமர் பாய் நம்மாளுங்களே முன்னால நின்னு பாராட்டு கூட்டம் நடத்தட்டுமே. எல்லாம் நம்ம அண்ணன் பண்ற வேல. அவரு எலக்சன் டயத்துல கருணாநிதிய திட்றதுக்காக மோடியவே நல்ல ஆளுன்னு சர்டிபிகேட் குடுத்தார்ல. அத மாதிரி நம்மாளுங்க எளுதியிருப்பாங்க.

அடடே. அஹமது. எலக்சன் பேச்சயெல்லாம் ஞாபகம் வச்சுருக்கீங்களா. நீங்க நான்லாம் மறந்திருப்போம்னு நெனச்சு இந்த வாரம் குஜராத் போலி என்கவுண்டர் பத்திலாம் செய்தி போட்டிருக்காங்கலே.

ஏன் இப்பவும் குஜராத் மோடியோட ஆட்சியில அங்க முஸ்லிம்கள் அமைதியா இருக்காங்கன்னு செய்தி போடச் சொல்றீங்களா. எலக்சன் டயத்துல பேசிட்டு வாங்கி கட்டிக்கிட்டதே போதும் போங்க.

சரி அத வுடுங்க. நுபார்தீன் விஷயமா எளுதியிருக்காங்கலே பாத்தீங்களா.

ஆமா அஹமது. எதயுமே நாம ஞாபகம் வச்சுக்க மாட்டோம்ங்கிற தைரியத்துலதான் இப்புடிலாம் எளுதுறாருன்னு நெனக்கிறேன். அவர விவாதத்துக்கோ, முபாஹலாவுக்கோ கூப்டுறவங்கள்ட்ட இருந்து தப்பிக்க இப்புடிதான மாத்தி மாத்தி சொல்லி நம்மள தலயாட்ட வச்சுட்டாரு.

இப்ப மட்டும் என்ன கிளிச்சுட்டீங்க. இப்பவும் அவரு எளுதியிருக்குறத படிச்சுட்டு சும்மதான இருக்கோம்.

என்னங்க செய்றது. இதுலஇருந்து வெளியேற முடியாமத்தான முளிச்சிக்கிட்டு இருக்கோம். பரவாயில்லை நீங்க மறந்துருப்பீங்கன்னு நெனச்சேன். இவரு சுனாமி விஷயமா தமுமுகவ வம்புக்கு இழுக்கும் போது இப்புடித்தான் எடத்தையும் நேரத்தையும் இவரே முடிவு பண்ணுனாரு. இப்ப முஜீபு ரஹ்மான் அத கேக்காம நுபார் விஷயமா கேட்டவுடன் விவாதம், முபாஹலான்னு மறுபடியும் குண்டக்க மண்டக்க ஒளறி வச்சுருக்காரு போங்க.

இதாவது பரவாயில்லை ஒமர் பாய். நம்ம அண்ணன் மனசுல பொதஞ்சு போயிருக்குற எரிச்சல எல்லாம் வாசகர் இக்பால்ங்குற பேருல எளுதியிருக்காரு பாருங்க. அதுதான் ரொம்பவும் அசிங்கமா இருக்கு. இப்புடிலாம் எளுதுனா இருக்கிற கொஞ்ச நெஞ்ச மரியாதயும் கெட்டுத்தான் போகும் போங்க.

என்ன அஹமது. நாங் கவனிக்காத விஷயம் மாதிரி தெரியுது.

அட ஆமாங்க. இந்த வார பத்திரிக்கைல தமுமுக தலைவரு இன்டர்நெட்லாம் தெரியாம இருந்தாரு நம்மாளுதான் அவருக்கு சொல்லிக் குடுத்தாருன்னு வெளியிட்டிருக்காங்க.

திஸ் இஸ் டூடூ மச்சுங்க அஹமது. நம்மாளு நாலாவதே தாண்டாதவரு. தனக்கு இங்கிலீசுலாம்; தெரியாதுன்னு கோர்ட் படியேறி நீதிபதி முன்னால ஒப்புக்கிட்டவரு. ஆனா தமுமுக தலைவர் இன்டெர்நெட் மற்றும் மீடியா பத்தி ஆராய்ச்சி கட்டுரையே தயாரிச்சவரு. அவருக்குப் போயி நாந்தான் இன்டெர்நெட் படிச்சுக் குடுத்தேன்னு இவரு சொன்னாருன்னா அத மாதிரி ஒரு கிறுக்குத்தனம் எதுவுமிருக்க முடியாது. ஒருவேளை இது வேற யாரோ எளுதுனதா இருந்தாலும் அத போட்டிருக்கக் கூடாது. ஏன்னா எங்கள்ட்ட உள்ளவங்கள்ளாம் இப்புடிப்பட்ட அரகொறதான்னு நாமளே டமாரம் அடிச்ச மாதிரி ஆகிப்போச்சுல்ல அதுக்குத்தான்.

எப்புடியோ, தன்னோட வஞ்சத்த எல்லாம் நம்ம தலைல திணிக்கிறாரு போங்க.

அந்த காலம் இப்போ மாறிக்கிட்டு வருது அஹமது. கடலூர் விஷயம் தெரியும்ல.

தெரியலியே என்ன அது.

அப்ப கொஞ்சம் யோசிச்சிக்கிட்டு இருங்க. மறுபடியும் சந்திக்கும் போது விபரமா சொல்றேன்.

வஸ்ஸலாம், முல்லா 13.05.2007

Friday, May 11, 2007

கடலூரில் கிழிந்த பிஜேயின் கண்ணியம்


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பி.ஜே

கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.
கடலூர் மாவட்ட ததஜவின் சம்பவம் நமக்கு இதைத்தான் நினைவுபடுத்துகிறது. பத்திரிக்கை செய்தியைப் பார்த்த நமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம், 2004 ஏப்ரலில், மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை தரைமட்டமாக்கும் தரங்கெட்ட எண்ணத்துடன் அரசியல் செய்து வெளியேறியதிலிருந்தே நாம் சமுதாய சொந்தங்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தோம்.

தமுமுகவை சீர்குலைக்க நாடியதன் மூலம், இஸ்லாமிய சமுதாயத்திற்கே பேரழிவை நாடியவர் தான் இந்த பசுந்தோல் போர்த்திய புலியான பிஜே என்பதனை காலங்கடந்தாவது கடலூர் மாவட்ட ததஜவினர் புரிந்து கொண்டனர். தமிழகத்தின் பிறபகுதியினரும் விரைவில் மயக்கத்திலிருந்து மீள துஆச் செய்வோம்.

பாக்கர் விஷயத்தைப் பொறுத்தவரை, அவர் மீது நடவடிக்கை எடுத்து விட்டதாக ததஜவினர் கூறிய பொழுது நாம் கேட்ட கேள்வி, 'எத்தனை நாளுக்கு?' என்பது தான். பாக்கரின் லீலைகள் பலமுறை வெளிப்படும், அப்பொழுதெல்லாம் அதனை மூடி மறைப்பதில் கவனம் செலுத்திய கனவான் பிஜே, இப்பொழுது நடவடிக்கை எடுத்ததாக கூறிய பொழுது நம்மால் நம்ப முடியாமலே இருந்தது.

ஏனெனில் ஆரம்ப கால தமுமுகவின் நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்ய வாங்கிக் கொடுக்கப்பட்ட உபகரணங்களை உபயோகித்து பதிவு செய்யப்பட்ட வீடியோ கேஸட்களை பாக்கரின் நிறுவனமான மீடியா வேர்ல்ட் காப்பிரைட் உரிமை கொண்டாடிய பொழுது, இதனை துபாய்காரர் கேள்வி கேட்ட பொழுது, பாக்கருக்காக பரிந்து பேசியவர் இந்த நவீன (குரு) பீர் பிஜே தான்.

அன்று முதல் இன்றுவரை பொதுச் சொத்தை கபளீகரம் செய்வதில் கைகோர்த்துள்ள கனவான்களில் ஒருவர் மீது மற்றவர் நடவடிக்கை எடுத்தார் எனில் எப்படி நம்ப முடியும். அதனால் தான் நாம் கேட்டோம் எத்தனை நாளைக்கு இந்த நடவடிக்கை என்று.

நாம் எதிர்பார்த்தது போலவே பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளரானார். இதனை கடலூர் சகோதரர்கள் எதிர்பார்க்க வில்லை போலும். அதனால் தான் கொதித்தெழுந்துள்ளனர். ஆனாலும் அன்று நடவடிக்கை ஏன் எடுத்தோம் என ஆடியோவில் உரையாற்றும் பொழுது ஆணித்தரமாக பேசி அசர வைத்த கிரிமினல் தலைவர் இன்று அசடு வழிந்துள்ளார்.

திருச்சியில் ஜுலை போராட்டம் பற்றி விவாதிக்கத்தான் கூடினார்களாம். அதில் ஒரு துணை அஜண்டாவாக பாக்கருக்கு பதவி அளிப்பது குறித்து பேசினார்களாம். கரம் உயர்த்தி ஆதரவு கேட்கப்பட்டு அதனடிப்படையில் பதவி வழங்கப்பட்டதாம்.

காதுகளில் பூப்பந்து அல்ல பூந்தோட்டத்தையே பதியன் செய்வது தான் பிஜேயின் தனித்தன்மை. பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு இவர்கள் அறிவித்தது தண்டனையே அல்ல என்று இப்பொழுது பேசும் பிஜே, அன்று பாக்கர் நீக்கப்பட்ட விபரம் குறித்து பேசிய பொழுது தவறு நடந்திருக்க வாய்ப்பிருந்திருப்பதால் அவர் பதவி விலகுவது தான் நியாயம் என நாங்கள் எண்ணினோம். அவரும் ஒப்புக் கொண்டதால் பதவியைத் துறந்து சாதாரண தொண்டாக இருந்து களப்பணியாற்ற சம்மதித்துள்ளார் என முழங்கினார்.

ஆனால் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. பதவி மோகமில்லாத பாக்கரும் பணிவுடன் பறிக்கப்பட்ட பதவியை சூழ்ச்சியின் மூலம் மீண்டும் பெற்றுக் கொண்டார்.


இது விஷயத்தில் நியாயமாக எழும் சில கேள்விகளை நாம் எழுப்பியிருந்தால் அதனை அவதூறு என தனது சீடர்களிடம் அடித்துச் சொல்லி அதன் மூலம் அனுதாபம் பெற்றிருப்பார். ஆனால், எதிர்பாராத தருணத்தில் கடலூரிலிருந்து இக்கருத்து புறப்பட்டு வந்ததும் கதிகலங்கிப் போய் பொதுக்குழு என்ற பெயரில் பொதுமக்கள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சனை குறித்து அறியாத மக்கள் முன்னிலையில் மற்றவர்களை மட்டம் தட்டி ஏளனம் செய்து தனது மாநில தலைவர் எனும் கணையை வீசி கேள்வி கேட்டவர்களை விலக்கியுள்ளார்.

கடலூர் (முன்னாள்) ததஜவினர் கேட்ட கேள்விக்கு இந்த நவீன ஆபூஜெஹல் அளித்த பதிலைப் படித்தால், இவரையா பேரறிஞர் என எண்ணிக் கொண்டிருந்தோம் என எஞ்சியுள்ளவர்கள் வெட்கித் தலைகுனியும் வண்ணம் விளக்கமளித்துள்ளார்.

(கடலூர் சகோதரர்களின் கேள்விகளை காண இங்கே சொடுக்கவும்)

பக்கம் -1, பக்கம் -2, பக்கம் -3, பக்கம் -4

இந்த கேள்விகளை இதுவரை கேட்காமலிருந்த ஏனைய ததஜ நிர்வாகிகளும் ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாங்கள் உண்மை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்வதை உடனடியாக நிறுத்துவார்களா?

இத்தகைய கேள்விகளை கேட்க முன் வராதவர்கள் பாவத்தின் பங்காளிகள் என உணர்ந்து கொள்வார்களா?

தமுமுகவை உடைக்க நாடியதிலிருந்து பாக்கர் (கோவில் பட்டி) விஷயம் வரை எத்தனை விஷயங்களில் நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறி மாறி பல்டியடித்து அரசியல்வாதிகளையே அசர வைத்துள்ளார் என இப்பொழுதாவது ததஜவின் அடிவருடிகள் எண்ணிப் பார்ப்பார்களா?

இல்லை. எங்களுக்கு எதுவும் விளங்காது. எதுவாக இருந்தாலும் அண்ணன் சொல்றாரு அடிவருடி நாஞ் செய்றேன்னு வால் புடிச்சு தக்லீதின் அடித்தட்டிலேயே வீழ்ந்து கிடக்கப் போகிறார்களா. பொறுத்திருந்து பார்ப்போம்.

தேவைப்பட்டால் மீண்டும் அனைத்தையும் நினைவூட்டுவோம்.

அனைத்து சகோதர்களும் நேர்வழி பெற வேண்டுமென்பதற்காகவே இதனை எழுதியுள்ளோம்.

வஸ்ஸலாம், ராவுத்தர் 12.05.2007

Wednesday, May 09, 2007

கூண்டோடு கலைந்தது கடலூர் மாவட்ட ததஜ

செய்தியை பெரியதாக்கிப் பார்க்க செய்தித்தாளின் மீது கிளிக் செய்யுங்கள்.

Monday, May 07, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 14

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. .. )

வ அலைக்கு முஸ்ஸலாம். என்ன ஒமர் பாய் திடீர் திடீர்ன்னு காணாம போயிடுறீங்க. அதுசரி என்ன ஒரே சந்தோசமா இருக்கிறா மாதிரி தெரியுது.

நான் சிரிச்சுக்கிட்டு இருக்குறதைப் பாத்து இப்புடி கேட்குறீங்களே. நம்மளப் பாத்து இன்னக்கி நாடே சிரிக்கிது போங்க.

எங்க போறது. மண்குதிரய நம்பி ஆத்துல எறங்குன கதயா, தவ்ஹீதுன்னு நம்பி இப்போ தக்லீது பண்ண ஆரம்புச்சு அதுவும் எல்ல மீறிப் போயிடுச்சே. இப்போ போங்கண்ணா எங்க போறது.

அட என்ன அஹமது இதுக்குப் போயி இப்புடி கோவப்படுறீங்க.

சரி சரி ஒமர் பாய், நீங்க எதுக்கு சிரிச்சீங்க. பாக்கர் விஷயத்த நெனச்சா.




பாக்கர்


பாக்கர் விஷயந்தான் நம்மள எல்லாம் முட்டாள்னு அடயாளம் காட்டியாச்சே.

நான் சிரிச்சதும் அது விஷயமாத்தான் ஆனா இது வெளிநாட்டு விஷயம்.

என்ன ஒமரு கொளப்புறீங்க. ஏன் பாக்கரு இப்ப துபாய் போன சமயத்துல அங்க என்னமும் நடந்துருச்சோ.

சேச்சே. அப்படியெல்லாம் பயப்படாதீங்க, அஹமது. தவிர இங்க உள்ளதவிட அவருக்கு அங்க அதிக வாய்ப்புகள் இருக்கத்தான் செய்யுது. ஆனாலும் அங்கெல்லாம் போனா நம்மாளு கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பாரு.

அதில்ல. நம்ம மவ்ளூது நடிகர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌஸி சவுதில இருக்கும் போது, புளு பிலிம் கேஸட் வாங்கும் போது நம்ம சகோதரர்கள் சிலர்ட்ட மாட்டிக்கிட்டாரு. அப்புடியாக்கும்னு செனச்சேன்.

அட நாஞ் சொல்ல வந்தத சொல்ல வுடுங்களேன். நம்ம பாக்கரு மறுபடியும் பொதுச்செயலாளரான விஷயத்த சவுதில உள்ள நம்ம நிர்வாகிகள் அறிவிச்சு இருக்காங்க. உடனே.. .. ..

அய்யய்யோ. என்ன ஆச்சு ஒமரு பாய். எல்லாரும் கொந்தளிச்சு எந்திருச்சுட்டாங்கலா, பொம்புள விஷயத்துல அப்புடி அப்புடி இருப்பாருன்னு அரசல் புரசலா கேள்விப்பட்டிருந்தாலும், நம்ம அண்ணனே விலாவாரியா பஸ்ல எப்புடி நடந்திருக்கும்னு, பஸ்ஸுலயே இப்புடின்னா மத்தபடி எப்புடியெல்லாம் இருந்திருப்பாங்க சொன்னதுனால, அவுங்களால இத ஏத்திருக்க முடியாது. அங்க கொஞ்சமாவது தவ்ஹீது சிந்தனயுள்ளவங்க இருந்திருப்பாங்க. நம்மள மாதிரி முழுக்க முழுக்க தக்லீதுவாதிகளா இருந்திக்க மாட்டாங்க. சரி சரி நானே பேசிக்கிட்டிருக்கேன். நீங்க சொல்லுங்க. அங்க என்ன நடந்துச்சுன்னு.

எங்க சொல்ல வுட்டீங்க. இப்புடியெல்லாம் நடந்திருந்தா நான் சிரிச்சுக்கிட்டா வந்திருப்பேன். அங்க இருக்கிறவனுங்க நம்மலயெல்லாம் தூக்கி சாப்புட்டானுங்க. பாக்கர் மறுபடியும் பொதுச்செயலாளரா ஆயிட்டார்னு அறிவிச்சதும், 'அல்லாஹு அக்பர்'னு கோஷம் போட்டாங்களாம்.

அடக்கொடுமையே. இன்னாலில்லாஹ் சொல்ல வேண்டிய நேரத்துல இப்புடியா சொன்னாங்க.

இதுவாவது பரவாயில்லை. ஆனா பாக்கருக்கு மறுபடியும் பதவி குடுத்ததுக்கு ஒரு காரணம் சொல்லியிருக்காங்க பாருங்க. அது அதவிட பெரிய கூத்து.

அப்புடி என்ன சொன்னாங்க ஒமர் பாய்.

அதாவது, பாக்கருக்கு தமுமுகவினர் அழைப்பு விட்டாங்களாம். அவரு அங்க சேர்ந்துடக்கூடாதுன்னுட்டு, திரும்ப கூப்ட்டு பதவி குடுத்துட்டாங்களாம். இதச் சொன்னவுடன் தான் அங்க இருந்த எல்லாரும் அல்லாஹு அக்பர்னு கோஷம் போட்டாங்களாம்.

சே. கேக்கவே வெக்கமா இருக்குங்க ஒமர். ஒரு நேரத்துல நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்னு கோஷம் போட்டவங்கள யெல்லாம் எவ்வளவு கிண்டலும் கேலியும் செஞ்சோம். இப்ப என்னடான்னா, செக்சு குத்தம் சொல்லி விளக்குனவர எந்த ஒரு வெளிப்படையான காரணமும் சொல்லாம இப்ப திரும்ப கூப்பிட்டுகிட்டதோட அதுக்கு அல்லாஹு அக்பர்னு கோஷம் வேற. சே.

என்ன அஹமது இப்புடி சலிச்சுக்கிறீங்க. ஆனா ஒண்ணு கவனிச்சீங்களா. தமுமுகவுக்கு போனா போகட்டுமே. நமக்கு வசதி தானே. இப்புடி செக்சு குத்தம் செய்தவங்களெல்லாம் அங்க தான் இருப்பாங்க. ஏன்னா அவுங்க அரசியல்வாதிங்க. ஆனா நாங்க கொள்கைவாதிங்கன்னு அண்ணன் அடிக்கடி சொல்வாரே, அதுனால போனா போகட்டும்னு ஒருத்தர் கூட பேசலியே. அதுதான் நம்மாளுங்க.

வெக்கக்கேடு இதுல என்ன பெருமை வேண்டிக் கெடக்கு. ஒருவேளை அவரு தமுமுகவுக்குப் போனா நம்ம அண்ணனோட ஊழலயெல்லாம் அம்பலப்படுத்திருவாரோன்னு பயந்திருக்கலாம். விடுங்க. நெனெச்சாலே நெஞ்சு கொதிக்குது. போயஸ் தோட்டத்து பணபட்டுவாடா வௌகாரம் தான் காரணம்னு பல பேச்சு உலாவுது. இத விட்டுட்டு வேற எதாவது இருந்தா சொல்லுங்க.

இத விட்டா அடுத்த ஹாட் டாபிக் வாரிய தலைவர் பதவி தான்.

ஆமா தமுமுக ஹைதருக்கு வக்ஃப் வாரியம் கெடச்சதுல நம்ம ஆளுங்க ரொம்பத்தான் வயிறெரிஞ்சு போயிட்டாங்க. அதுதான் ஏன்னு எனக்குப் புரியல.

ஏன்னு புரியலியா. வக்ஃப் வாரியம்ங்கிறது தமிழகத்துல உள்ள வக்ஃப் செய்யப்பட்ட எல்லா பள்ளிகளையும் நிர்வகிக்கக் கூடியது. இப்பவே தன்னோட சுயநலமில்லாத சேவை மூலமா எல்லா தரப்பு மக்களயும் தமுமுக ஈர்த்துருச்சு. இப்போ வக்ஃப் வாரியம் கெடச்சதுனால பெரும்பான்மையா இருக்குற பள்ளி நிர்வாகத்தை ஈஸியா நெருங்கிற முடியும். இப்பவே நம்மள யாரும் கண்டுக்குற மாட்டேங்குறாங்க. இந்த நெலமைல தமுமுக இப்புடி எல்லோரையும் வளச்சுக்கிடுச்சுன்னா நம்மோட கதி.. .. .. ..

அட ஆமா. ஆதோ கதிதான். நாங்கூட பள்ளிகள நிர்வகிக்கக் கூடிய வக்ஃப் வாரிய தலைவரப் பத்தி பள்ளிக்கே போயி தொழாத நம்ம அண்ணன் ஏன் கோவப்படுறாருன்னு தலய பிச்சுக்கிட்டிருந்தேன்.

நம்ம போன ஆட்சியில இருந்த மந்திரிங்க தொனையோட கடையநல்லூர் பள்ளிய கைப்பத்துனமே அதக்கூட வக்ஃப் வாரியம் தலயிட்டதுனால தான திருப்பிக் குடுக்க வேண்டியதாப் போச்சு. அதமாதிரி இப்போ மேலப்பாளையமும் ஆகிப்போச்சுன்னா என்ன செய்றதுங்குற கவல வேற. மத்த ஆளுங்களா இருந்தா போயஸ் தோட்டத்து காசுல அல்லது சுனாமி, ஜகாத் மாதிரி பொதுவான பேரச் சொல்லி வசூலிச்சு நம்ம கணக்குல வச்சுருக்குற பணத்த குடுத்து சரி கட்டலாம். தமுமுககாரன லஞ்சம் குடுத்து மடக்க முடியாதே அப்புடீங்குறதும் காரணம்.

அதாவது, நேர்மையான அதிகாரிகளப் பார்த்து லஞ்சம் குடுத்தே பளக்கப்பட்ட காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதியும் பயப்படுறா மாதிரி நம்மாளுங்க பயப்படுறாங்கன்னு சொல்லுங்க. என்னைக்கு போயஸ் தோட்டத்து பெட்டிய வாங்குனாரோ அன்னைல இருந்து நம்ம தலவரு அரசியல்வாதிகளையே மிஞ்சிட்டாரு போங்க.

சரி அஹமது கடைசியா ஒரு மேட்டரு, இப்ப காலங்கடந்து அப்ஸல் குருவப்பத்தி எளுதியிருக்குறத கவனிச்சீங்களா?

ஆமா ஒமர் பாய். நானும் பார்த்தேன். அப்ஸல் குரு விஷயத்துல தமுமுககாரங்க எந்த அளவுக்கு கருத்தரங்கம், பத்திரிக்கையாளர் சந்திப்புலாம் நடத்தி மக்களோட கவனத்த ஈர்த்தப்பல்லாம் நாம் ஒண்ணுமே சார்பா எளுதாம பேசாம இருந்துட்டு இப்ப மட்டும் ஏன் எளுதுறாங்கன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.

அப்ஸல் குரு விஷயம் பீக்ல இருந்தப்போ அம்மா ஜேஜே அப்ஸல உடனடியா தூக்குல போடனும்னு ஆர்.எஸ்.எஸ் கருத்த எதிரொலிச்சாங்க. அப்ப எப்படிங்க நாம அதுக்கு மாத்தமா எளுதவோ பேசவோ முடியும். அதுனால தான், சதாமுக்கு சாதகமா எளுதுனப்போ கூட அப்ஸல் விஷயம் அப்புடி இல்ல. நியாயமான விசாரணைக்குப் பின்னால தீர்ப்பு இதுங்குறதுனால நாம அதுக்காக ஆர்ப்பாட்டம்லாம் செய்ய முடியாதுன்னு நம்ம தலவரு பதில் எளுதுனாரு. ஆனா இப்போ ஈயூ (EU) தலையீட்டைப் பத்தி அம்மா அறிக்கை எதுவும் விடலங்குறதுனால அவசரமா எளுதிட்டாங்க. இப்பவாச்சும் புத்தி வந்துச்சேன்னு சமாதானம் அடைய வேண்டியது தான்.

என்னமோ போங்க ஒமர். இப்டி தான் நாம அவரு செய்யுற எல்லாத்துக்கும் ஆமா சாமி போட்டு கிட்டு காலத்த ஒப்பேத்த வேண்டியிருக்கு. எதுலயும் ஒரு நியாயமான நிலபாட்ட எடுக்க முடியாத அளவுக்கு தக்லீதுல ஊறிப்போயிட்டோம் போங்க.

சரி அஹமது. பெறகு சந்திப்போம். வஸ்ஸலாம்.

முல்லா