Friday, June 29, 2007

பாக்கருக்கு நந்தினியே போதும்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

தில்லுமுல்லு செய்வதில் கைதேர்ந்தவர்களை கிராமங்களில், 'திருவாளி எத்தன்' என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள்.


இந்த அடைமொழி தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் தலைவன் பிஜேக்கு நன்றாகவே பொறுந்திப் போகிறது.

இந்த திருவாளி எத்தன் சமீபத்தில் செய்த தில்லுமுல்லுகளில் டாப் ரகத்தில் உள்ளது தான் பாக்கரின் கோவில்பட்டி ரதிமீனா பஸ் விவகாரம்.

இந்த விவகாரம் பலரையும் பார்த்து பல் இளித்துக் கொண்டதால், ததஜவின் உறுதியான கோட்டை என்று கருதப்பட்ட கடலூர் மாவட்ட ததஜவும் அதன் கிளைகள் அத்தனையும் கலைக்கப்பட்டது.

விழுப்புர மாவட்ட ததஜ ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

'தவ்ஹீத்' என்ற ஒற்றைச் சொல் அந்த இயக்கத்தின் பெயரில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காகவே அந்த அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்களில் பலர் கழன்று விட்டனர். இப்பொழுதும் சுவடு தெரியாமல் தாய் கழகத்திற்கு திரும்பிக் கொண்ருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் முக்கியமாக முழு முதற்காரணம், மக்கள் இப்பொழுதெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது தான்.

திருவாளி எத்தன் பிஜேயின் தில்லுமுல்லுகளுக்கு ஒரு சாம்பிள் தான், பாக்கரை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதும் சேர்த்ததும். பாக்கர் நந்தினியோடு பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணம் செயததால் பதவியிலிருந்து நீக்கினாராம்.

நாங்கள் தான் கடைந்தெடுத்த தவ்ஹீத்வாதிகள், அதனால் பெரிய பொறுப்பில் உள்ளவர்களைக் கூட தூக்கி எறிய தயங்க மாட்டோம். இந்த தூய(?) தன்மையை கூட மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களாம். இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டுமாம். என்னே பிஜெயின் ஆணவம்?

இவ்வளவையும் சொல்லி விட்டு, அவர் விபச்சாரம் செய்ய வில்லையாம். விபச்சாரத்திற்கு நெருக்கமான செயலைத்தான் செய்தாராம். அதற்கு இஸ்லாத்தில் எந்த தண்டனையும் இல்லையாம். அதனால் மீண்டும் பொதுச்செயலாளராக ஆக்கிக் கொண்டாராம்.

அதுமட்டுமல்ல, நான்கு சாட்சிகள் இல்லாமல் விபச்சாரம் செய்ததாக சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விளக்கவுரை வேறு.

தனது பேச்சுத் திறமையால் சிந்திக்கத் தெரியாத சில ததஜவினரை மடையர்களாக ஆக்கும் திருவாளியத்தன் பிஜே, வசதியாக, தனது வசதிக்காக இன்னும் பல விஷயங்களை விளக்கவுரையில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்.

'பாக்கரிடம் - நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறில்லையா? என்று கேட்கும் போது இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் அந்த பெண்ணிடம் கூறியதாக மதரஸாவில் இருக்கும் ஆலிமாவிடம் இந்த பெண் கூறி அந்த ஆலிமா பிஜேயிடம் சொன்னாராம்'

மேற் சொன்ன கூற்றை பிஜே 11.03.2007 ல் லால்பேட்டையில் நள்ளிரவு 12:00 மணிக்கு கூட்டிய 150 பேர்களின் முன்னால் சொன்னவைகள்.

பாக்கர் விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை அந்த நந்தினி என்ற பெண்ணே வாக்கு மூலம் கொடுத்திருக்கும் போது, நான்கு சாட்சியங்கள் வேண்டும் என்று பிஜே சொல்வது எதனால்? பாக்கரிடம் பிஜே பிஸ்னஸ் விஷயத்தில் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார் என்பதற்காகவா? அல்லது தன்மீதும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு இருப்பதை பாக்கர் வெளியிட்டு விடுவார் என்று பயந்தா?

நபிகளாரின் நடைமுறைப்படி பாக்கர் கல்லால் எறிந்து கொல்லப்பட தகுதியானவர்.

ஒரு கர்ப்பிணிப்பெண் நபிகளாரிடம் வந்து தான் விபச்சாரம் செய்து விட்டதாக சொல்கிறார். குழந்தையை பெற்றெடுத்த பின் அந்த பெண் நபிகளாரின் உத்தரவின் பேரில் கல்லால் எரிந்து கொல்லப்பட்டார். இந்த வரலாறு பிஜேக்கு தெரியாதோ?

ஓஹோ! இந்தியாவில் இந்த மரணதண்டனையை நிறைவேற்ற முடியாது, அதனால் தான் விபச்சாரகனுக்கு ததஜவில் பொதுச் செயலாளர் பதவியோ!

இந்தியாவின் காவல் துறையில் எந்த அளவுக்கு காவலர் மக்களை சித்திரவதைக்கு ஆளாக்குகிறாரோ அவருக்கு பதக்கமும் பதவி உயர்வும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுவது போல், தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தில் ஒரு விபச்சாரகனுக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதில் எமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.

வஸ்ஸலாம்

இப்னு ஃபாத்திமா 30.06.2007

Wednesday, June 27, 2007

சிறுபான்மையினருக்கு தனி இயக்குநரகம் அமைப்பு

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு தனி இயக்குநரகம் அமைப்பு

சென்னை, ஜூன் 27: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு தனி இயக்குநரகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் துறை இயக்குநர் இனி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல இயக்குநர் என்று அழைக்கப்படுவார்.

அதே போன்று மாவட்ட அளவிலான அதிகாரிகளும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மைநல அதிகாரிகள் என்றே அழைக்கப்படுவர்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக பிரதமமந்திரியின் 15 அம்ச திட்டங்களை இத்துறை தீவிரமாக செயல்படுத்தும்.

சிறுபான்மையினருக்கு தனி நலவாரியம் ஊருவாக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் விடுத்த கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில் சிறுபான்மையினர் நலன் காக்கும் வகையில் இத்துறை செயல்படும்.

புதிதாக ஊருவாக்கப்பட்ட இத்துறையின் செயல்பாடுகளுக்கென இயக்குநருக்கு தனி நேர்முக ஊதவியாளர், மூன்று அலுவலக ஊதவியாளர்கள் ஆகியோரை ஓராண்டுக்கு நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிரைவரை டெக்ஸ்கோ மூலம் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி

இது தொடர்பான முந்தைய நமது போஸ்ட்டிங்கை காண இங்கே சொடுக்கவும்.

Thursday, June 21, 2007

பிஜேவின் மூக்கை உடைத்த ITJ முபாஹலா

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

சத்தியத்திற்காக போராடும் போது சாமானியனும், சக்தி வாய்ந்த எதிரியை வீழ்த்துவதும், சத்தியத்திற்கு எதிராக இறங்கும் போது சக்தி வாய்ந்தவர்கள் கூட சாமானியர்களிடம் மண்டியிட்டு மண்ணை கவ்வுவதும் நாம் அறிந்த ஒன்று தான்.


அன்று மதுரையில் சாமானியனாக இருந்த ஜனாப் பி.ஜெய்னுலாபிதீன், மிகச்சிறந்த அறிஞராக அறியப்பட்ட திரு.ஜெபமணியுடன் விவாதத்தில் ஈடுபட்ட சமயம், சத்தியத்திற்காக போராடியதால் அல்லாஹ் அந்த கொள்கைக்கு வெற்றியளித்தான்.

ஆனால் அவரோ அது தனிப்பட்ட தமது வாதத்திறமையால் பெறப்பட்டதாக கர்வம் கொண்டார். அந்த கர்வம் படிப்படியாக வளர்ந்து தலைக்கனம் அதிகமானதால், அதே ஜெயினுலாபிதீன் சமீபத்தில் களியக்காவிளையில் மார்க்கத்தை எவர் சரிவர புரிய வில்லை என இதுகாறும் சொல்லி வந்தாரோ அத்தகையோரிடம் கூட தோல்வியை தழுவ நேர்ந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவதற்குள்ளாகவே பீஜேயின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் அல்லாஹ் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளான். அழிவை நோக்கி அவரது பாதை பயணிக்கிறது என்பதனை கடலூர் சம்பவங்கள் மூலம் அறிவுள்ளவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

பிஜேவைப் பொறுத்த வரை ஒன்று விவாதம் இல்லாவிட்டால் முபாஹலா இவற்றில் ஒன்றைத்தான் எடுத்ததற்கெல்லாம் முன் வைப்பார்.

தமிழ் சமூகம் இதுகாறும் இவற்றில் இவருக்கு பலமுள்ளதாகவே எண்ணி ஏமாந்து வந்தனர்.

இவற்றைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட இலாஹி போன்றவர்கள் பல முறை அழைத்தும் விவாதித்திற்கோ, முபாஹலாவிற்கோ பிடி கொடுக்காமல், ஒடி ஒளிந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பி தனது அடிவருடிகளை குஷிபடுத்தி வந்தார்.

இந்த வகையில் கடலூர் ITJ காரர்களை பாராட்டத்தான் வேண்டும். ஏனெனில் முதலாவதாக காலதாமதம் செய்யாமல் பீஜேவை சந்திக்கு இழுத்து வந்து விட்டனர். தவிரவும், அவரது வழமைப்படி சமாதானம் பேசிய போதோ அல்லது நடுவரை விலைக்கு வாங்க முயற்சித்த போதோ, எதற்கும் அசராமல் தங்களுடைய நிலையில் உறுதியாக இருந்துள்ளனர்.

அதனால் தான், இன்று ITJ காரர்களை விட அதிக சக்தி பெற்றிருந்தும், தவறான கொள்கைக்காக வரிந்து கட்டி நின்றதால், சாமானியர்களான ITJ காரர்களின் முன் பிஜேவின் சத்தியம்(?) சந்தி சிரித்து விட்டது.

முபாஹலாவில் பீஜே மூக்குடைபட்டது எதனால்?

முதலாவது, பீஜேவின் தரப்பில் எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை.

கடலூர் ITJ ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் குற்றச்சாட்டு பாக்கர் விஷயத்தில் பீஜே கூறியது பொய்யா? அல்லது பாக்கர் விஷயத்தை பாதிப்பில்லாமல் மூடி மறைக்க திரை மறைவில் ஏதேனும் பேரம் நடந்ததா.

ஒன்று கோவில்பட்டி பஸ் விஷயமே நடைபெறவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டும். அதற்கு சாத்தியமில்லை. பஸ் விஷயத்தை எல்லாவிதமான பில்ட் அப்புகளுடன் சேர்த்து பார் முழுவதும் பரப்பியாகி விட்டது. எனவே இதற்கு சாத்தியமில்லை என்றாகிப் போனது.

சரி நடந்தது உண்மைதான். அதற்காகவே அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டோம். தவறு செய்தால் தலைமை நிர்வாகியாக இருந்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுப்போம். ஏனெனில் நாங்கள் கடைந்தெடுத்த தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டமும் அடித்தாகி விட்டது.

ஆனால் அப்புறம் தானே புரிகிறது. பாக்கர் என்பவர் பேசாமல் ஒதுங்கி விடும் ரகமல்ல. மாறாக, கீழே தள்ளினால் நமது காலையே வாரிவிடும் கருணையுள்ளவர் என்பது, பாக்கர் துபாய் சென்றபின் பீஜேக்கு புரிந்துள்ளது.

இது வரை சம்பாதித்து வைத்த கண்ணியம் போனாலும் பரவாயில்லை, ஆனால் இடையில் கிடைத்த கரன்ஸிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக் கூடாது என அவசர முடிவெடுத்து, அதற்காகவே செயற்குழுவைக் கூட்டி, பொதுக்குழு கூட்ட முடியவில்லை என பொய்யான காரணம் கூறி நடித்து பாக்கருக்கு மீண்டும் முடி சூட்டினார்.

அதுவரை பீஜேயின் பித்லாட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் வெளுத்ததெல்லாம் பால் என நம்பிக் கொண்டிருந்த கடலூர்காரர்கள் கலகம் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

இலாஹி அளவிற்கு ஆரம்பகால தவ்ஹீத் வரலாறோ, ஆரம்ப கால பீஜேயின் வரலாறோ இந்த கடலூர்காரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என எண்ணினாரோ அல்லது முஜீபுர்ரஹ்மான் உமரி போன்று இவர்கள் குர்ஆன் ஹதீஸில் புலமைபெற்றிருக்க வாய்ப்பில்லை என எண்ணினாரோ தெரியாது. ஆனால் பீஜே அவசரப்பட்டு அவர்களை வீழ்த்த சதித்திட்டம் தீட்டினார். ஆனால் வல்ல அல்லாஹ் அவர் வெட்டிய குழியில் அவரையே விழச் செய்து விட்டான்.

இந்த முபாஹலாவிற்கு தனது தரப்பு ஒருங்கிணைப்பாளராக பீஜே தெரிவு செய்த நபர் இதே பீஜேவால் காமந்தகன் என பட்டம் சூட்டப்பட்ட கோவை ஜாபர் அதாவது புறா, அதாவது நந்தினி விஷயமாக பாக்கர் நடந்து கொண்ட விதத்தை முபாஹலா செய்ய, சியாமளாவோடு சல்லாபித்த புறா.

இந்த தேர்வே இவருடைய தரப்பில் நியாயமோ நீதியோ இல்லையென வெட்டவெளிச்சமாக்கும் நிலையில் இவருடைய கண்ணியம் காற்றில் பறக்காமல் என்ன செய்யும்.

பீஜேவின் தோல்வி என்பது, கடலூர் ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் முபாஹலாவிற்கு முன்பே வெளிப்பட்டு விட்டது. ஆம். இந்த முபாஹலா அழைப்புக்குப்பின் அவசர அவசரமாக தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், ஏதுமறியா பொதுமக்களை திசை திருப்புவதற்காகவும் போயஸ் தோட்டத்தில் அறுவடை செய்த பணப்பயிரைப் பாய்ச்சி ஆட்களை திரட்டி பலம் காட்டும் அரசியல்வாதி அவதாரம் எடுத்தாரே அப்பொழுதே இந்த பீஜேவிடம் பித்தலாட்டத்தைத் தவிர வேறொன்றுமில்லை என பெரும்பாலானவர்களுக்கு புரிந்து விட்டது.

அதாவது, பாக்கரை வெளியே தள்ளியபின் கடலூர் நிர்வாகிகள் உள்ளிட்ட குழுவிடம் பேசிய பொழுது, பாக்கர் நந்தினியோடு என்னஎன்ன சல்லாபங்களில் ஈடுபட்டிருப்பார் என விளக்கமாக விரசமாக பேசினார்.(ஆடியோவிற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.)

அதே பீஜே, பாக்கரின் கிடுக்கிப்பிடியில் தப்பிக்க முடியாமல், அந்த செயற்குழுவைக்கூட்டி மீண்டும் பாக்கருக்கு முடிசூட்டியபின் பேசிய பொழுது அவரையும் அறியாமல், ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறார்.

அதாவது, 2004 இல் தமுமுகவிலிருந்து கிடைத்ததை அபகரித்துக் கொண்டு ஓடிய பொழுது பாக்கரும் அவர் வழி நடந்தார். அந்த தருணத்தை நினைவு கூறும் பீஜே, கூறுவதைக் கேளுங்கள். (வீடியோ)

அதாவது, பாக்கர் மட்டும் இல்லையென்றால் அன்றைக்கு நான் யார்? எனக்கு என்ன இயலும். கொஞ்சம் மக்கள் ரசிக்கும் படி பேசுவேன். இதைத்தவிர என்னால் என்ன இயலும்... .. ..

இப்படியாகப் போகிறதல்லவா. இதன் மூலம் பீஜே ஒப்புக் கொள்ளும் விஷயங்கள்.

1. ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரியாவிற்கு போட்டியாக, தனக்கென மூன் பப்ளிகேஷன் ஆரம்பித்தது போல், பாக்கருக்கு போட்டியாக மூன் கிரியேஷன்ஸ் ஆரம்பிக்கப்படாத நிலையில் தன்னை சந்தைப் படுத்த பாக்கரை விட்டால் வேறு நாதியில்லை.

2. பாக்கர் உடன் இல்லையென்றால், தான் தமுமுகவிலிருந்து சுருட்டிய சொத்துக்களை அனுபவிக்க இயலாது. எனவே தான் தமுமுகவின் பொருளாளராக இருந்த பாக்கரை பக்கத்தில் வைத்துக் கொண்டார். பாக்கர் இல்லாவிடில் தமுமுக சொத்துக்களை சுருட்டியிருக்க முடியாது.

3. தவ்ஹீது என்று தெருவெல்லாம் கூப்பாடு போட்டதெல்லாம் சும்மா. பாக்கரை வைத்துத்தான் பணம் பார்க்க வேண்டியிருந்தது.

4. இதே காரணத்தால் தான் ஒய்.கே.மேன்சன் விவகாரத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து உண்மைகளை மூடி மறைத்தது.

5. தவ்ஹீது என்று போலியாக கூறினாலும், அதனை நம்பி வந்த அறிஞர்களால் மவ்லவிகள் ததஜ வளர்ச்சி பெறவில்லை. மாறாக தரங்கெட்ட செயல்களில் ஈடுபட்டாலும் பாக்கர் தான் பக்கபலமாக இருந்தார் என்று சான்று அளிக்கிறார்.

இவையும் இவை போன்ற பல விஷயங்களையும் கேட்ட பொழுதே இவர் தனது பொருளாதார பாதுகாப்பிற்காக பாக்கரை தூக்கிப் பிடிக்கிறார் என பலருக்கும் புரிந்து விட்டது.

கடலூரில் மூக்குடைபட்டாலும் முழு சரீரமும் கிழிந்து தொங்குவது வரை அவரையே சார்ந்திருப்போம் என இன்னமும் சிலர் சொல்லப் போகிறார்களா.

பொறுத்திருந்து பார்ப்போம்.

ராவுத்தர் 21.06.2007

Saturday, June 16, 2007

'அம்மா' வழியில் 'அண்ணன்'..?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் தலைவர் திருவாளர் பீஜே ஒரு காலத்தில் பலரால் அண்ணன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
ஆனால், என்று போயஸ் தோட்டத்து பொன்மகளிடம் பெட்டியை பெற்றுக் கொண்டு சமுதாயத்தை பிளக்க எண்ணி சரணடைந்தாரோ, அன்று முதல் இன்று வரை அம்மாவின் பாணியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.

ஜெயலலிதா கோபித்துக் கொள்வாரோ என்பதற்காக அப்ஸல் குரு விஷயத்தில் தாறுமாறாகப் பேசினார். அப்ஸல் குருவிடம் நியாயமான விசாரணை நடை பெற வில்லை என தமுமுக போன்ற சமுதாய சிந்தனையாளர்கள் போராடிக் கொண்டிருக்க, அப்ஸல் குருவிற்கு நியாயமான வாய்ப்பளிக்கப்பட்ட பின்னரே அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என திருவாய் மலர்ந்தருளினார்.

பலரும் சுட்டிக்காட்டியும் தன்னை திருத்திக் கொள்ள வில்லை.

அவரின் அரசியல் குரு செல்வி ஜெயலலிதாவைப் பின்பற்றி தற்சமயம் தன்னுடைய அரசியல் கட்சியின் நிர்வாகிகளின் மேல் பழிபோட்டுள்ளார்.

அதாவது, ஜெயலலிதா தன்னுடைய ஆட்சி காலத்தில் இணைந்து பணியாற்றிய இன்னும் சொல்வதானால் அவரோடு இசைந்து பணியாற்றிய அன்றய கவர்னர் திரு சென்னாரெட்டியை பற்றி அவதூறாக குற்றம் சுமத்தினார். தன்னை மானபங்கப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டினார்.

அத்தகையவரிடம் கைக்கூலி பெற்று சமுதாயத்தை பிளக்க நினைத்த பிஜே, தற்சமயம் முன்னாள் கடலூர் ததஜ நிர்வாகிகளைப் பற்றி செவிடர் என்றும் பொருளாதார மோசடியாளர்கள் என்றும் கூற ஆரம்பித்துள்ளார்.

20 இலட்ச ரூபாயை வெளிநாடுகளிலிருந்து வசூல் செய்து ஏமாற்றி விட்டதாக கூசாமல் புளுகியுள்ளார். எந்தெந்த நாடுகளிலிருந்து எவ்வளவு தொகை அவ்வாறு கையாடல் செய்யப்பட்டது. விளக்கமளிக்க முடியுமா இந்த வாய்ச்சொல் வீரரால். முடியாது என்பதால் தான் கொடுத்த வக்கீல் நோட்டீஸை திரும்ப பெற்றுக் கொண்டார்.

உண்மையை சொல்லப் போனால் 2004 இல் தனது பருப்பு இனி தமுமுகவில் வேகாது என்றாகியவுடன் தனி அமைப்பு கண்டவுடன், பல்வேறு காரணங்களைச் சொல்லி உழைப்பாளிகளின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் உறிஞ்சி கொளுத்தவர் இந்த பீஜே தான்.

மறுமையை நம்பும் பலர், இவரிடம் மறுமையில் தங்களது கோரிக்கையை எழுப்ப காத்துள்ளனர். இவருக்கோ மறுமையைப் பற்றிய அச்சமில்லாததால் எந்தெந்த வகைகளில் எல்லாம் பொதுமக்களை ஏமாற்ற முடியுமோ அந்தந்த வழிகளில் ஏமாற்றி வருகிறார்.

இப்பொழுது கூட தன்னுடைய சொத்து விபரங்களை குறிப்பாக 2004 க்குப் பின் சேர்த்தவைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட இவரால் முடியுமா?

முடியவே முடியாது. காரணம் எப்படி ஜெயலலிதாவால் தன்னுடைய சொத்துக்களை மதிப்பிட முடியாதோ, அவ்வாறே அவரிடம் கைக்கூலி பெற்ற பீஜேவாலும் முடியாது. காரணம், எவ்வாறு ஜெ.ஜெ ஒரு மன்னார்குடி மாஃபியா கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளாரோ அவ்வாறு தான் பீஜேயும் பாக்கரெனும் பிஸினெஸ் காந்தத்திடம் மாட்டிக் கொண்டுள்ளார். எனவே தான் இவரால் பாக்கரையும், ஜெயலலிதாவால் மன்னார்குடி மாஃபியாவையும் உதற முடியவில்லை.

சமுதாய சொந்தங்களே விழித்துக் கொள்ளுங்கள்.

ராவுத்தர் 13.06.2007

Sunday, June 10, 2007

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 17

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

வஅலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர்பாய். என்ன இப்பல்லாம் திடீர்னு வர்ரீங்க. திடீர்னு காணாப் போயிடுறீங்க.

என்ன செய்றது. அஹமது. கொளுத்துற வெயில்ல வெளிய தல காட்ட முடியலியே.

ஆக, வெளிய வராததுக்கு வெயில் தான் காரணம்னு சொல்றீங்க.

அடப்போங்க. அஹமது. அது தான் ஊரறிஞ்ச ரகசியமா போச்சே. களுத முன்னால போனா கடிக்குது. பின்னால போனா ஒதக்கிது.


ஆக, (டு)பாக்கர் மேட்டரு புலி வாலப்புடிச்ச கதயா ஆச்சுன்னு சொல்லுங்க.

ஆமா அஹமது. கோயில்பட்டி பஸ்ஸு விஷயத்தையும், ஒய்.கே.மேன்சன் சமாச்சாரம் மாதிரி தட்டி வுட்டுரந்தாருன்னா இந்த அளவுக்கு நாறியிருக்காது.

ஆக. தவ்ஹீதுங்குற பேர்ல தொடர்ந்து ஜல்சா பண்ணிக்கிட்டே இருந்தாலும் கண்டுக்காம வுட்டுரக்கணும்னு சொல்றீங்களா.

வேற என்னங்க செய்றது. அது தப்புன்னு சொல்லி நடவடிக்கை எடுக்கவும் முடியல. அது சரின்னு எல்லோரையும் ஏத்துக்க வைக்க முடியலியே.

அதுதான் நம்மாளு கெடந்து தடுமாறுராறே.

அத ஏன் கேக்குறீங்க. நம்மாளு போற போக்கப் பாத்தா மிர்ஸா குலாம் மாதிரி ஆகிடுவாரு போலன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே. எனக்கென்னமோ அவரு இப்போ பஞ்சாப்ல ஒரு குரூப் கௌம்புச்சே.. .. .. அது என்ன சச்சா கவுதாவா? அதப்போல நம்ம குரூப்பும் ஆகிடும் போல.

என்ன சொல்றீங்கன்னே வெளங்கல ஒமர் பாய். கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க.

அஹமது. இந்த அகாலிகள் இருக்காங்களே. அவுங்கள்ள யாராச்சும் தப்பு பண்ணிட்டா, அவுங்க பொற்கோயில்ல போயி, வர்ரவங்க கால களுவுறது, செருப்ப தொடக்கிறதுன்னு சேவை செய்யணும்.

அதுக்கும் நம்ப (டு)பாக்கர் விஷயத்துக்கும் என்னங்க சம்பந்தம்.

சரியாப் போச்சு போங்க. நீங்க நம்ம தலவரோட பேச்ச கேக்கலியோ.

அத நிறுத்தி பலகாலமாச்சு. இப்பல்லாம் குர்ஆன் ஹதீஸ எங்க சொல்றாரு. தன்னோட வாத தெறமைய நம்பி மட்டும் தான பேசுறாரு. அதுனால நான் சமீப காலமா எதயுமே கேக்கல.

தப்புச்சீங்க போங்க. பரவாயில்ல நானே சொல்லிடறேனே. அதாவது பாக்கர பதவியில இருந்து எடுத்ததுக்கப்புறமும் அவரு, தொடர்ந்து ததஜ ஆபிசுக்கு வந்தாராம். வந்தவரு மாடிப்படியில எல்லாம் குப்பையா இருக்குன்னு தொடப்பகட்டய எடுத்து படிய பெருக்கி சுத்தம் பண்ணுனாராம். ஆக, அகாலிகள் பொற்கோவில சுத்தம் பண்ணி பாவ மன்னிப்பு பெறுகிற மாதிரி நம்ம (டு)பாக்கரு ததஜ ஆபிஸ சுத்தம் பண்ணி பாவமன்னிப்பு பெற்று பதவியும் வாங்கிட்டாரு போங்க.

தொடப்பகட்ட. ததஜ ஆபீஸுல படி மட்டுமா குப்ப. மொத்த இயக்கத்தையே பெருக்கி தள்ளனும் போங்க.

என்ன அஹமது இப்புடி ஆவேசப்படுறீங்க.

வேறெ என்ன செய்யச் சொல்றீங்க. (டு)பாக்கர் வெசயமா மொதல்ல நம்மாளு என்ன சொன்னாரு, பஸ் விஷயமா கேட்டப்போ, பாக்கரு மறுத்தாரு. அப்புறமா நம்மள்ட்ட இருந்த ஆதாரங்கள் சாட்சிகளயெல்லாம் தூக்கிப் போட்டவுடன ஒத்துக்கிட்டாருன்னு சொன்னதா தான நீங்க சொன்னீங்க.

ஆமா அவரு சொன்னத தான் நான் சொன்னேன்.

இப்ப என்னடான்னா, இதுக்குலாம் ஒரு தண்டனையே கெடயாது. யாரும் குடுக்க முடியாதுன்னு பேசுனாருன்னா எப்படிங்க பொறுக்க முடியும்.

சரி சரி அஹமது அதுக்காக நீங்களும் கடலூர் காரங்க மாதிரி ஏன் குதிக்கிறீங்க.

ஆமா ஒமர் பாய் கேக்கணும்னு நெனெச்சேன். அவுங்களோட நெலம என்ன?

இதுவும் தெரியாதா ஒங்களுக்கு. சரிதான் போங்க. வர்ற 16 ஆம் தேதி முபாஹலாவுக்கு கூப்டுறுக்காங்க.

இவரு போயிட்டுதான் வேற வேல பாப்பாரு போங்க.

ஏன் அப்டி சொல்றீங்க அஹமது.

என்ன ஒமரு பாய். நீங்க தெரியாமத்தான் கேக்குறீங்களா. அல்லது தெரிஞ்சுகிட்டே என்னய நக்கல் பண்றீங்களா. பரவாயில்ல. அபூ அப்துல்லாவுல ஆரம்புச்சு நம்ம மவ்லவி முஜீபுர்ரஹ்மான் உமரி வர எத்தனையோ பேர்கிட்ட முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்தாரு. ஆனா இதுவர ஒருத்தர்ட்டயாவது முன்னால வந்து முபாஹலா பண்ணுனாரா.

ஆமா. ஒருத்தர்ட்டயும் பண்ணலதான். ஆனா அவுங்களா ஓடிப்போனதா தான சொன்னாரு.

அப்புடித்தான் சொல்வாரு. அப்புடி இல்லாம நாந்தான் பம்மாத்து காட்டுனேன். அத நம்பி அவனுங்க வந்துட்டானுங்க. நம்மாளய்லாம் முடியாதுன்னா சொல்வாரு.

அப்போ 16 ஆம் தேதிக்கு பெறகு எதாவது கத சொல்லி கடலூர்காரங்க ஓடிப்போயிட்டதா சொல்வாருங்கிறீங்களா.

அப்புடித்தான் நடக்கும்னு நான் நெனக்கிறேன். ஆனா கொஞ்ச பேரு, ஒங்க தலைவரு சொர்க்கம் நரகம் படைக்கப்படல, அல்லாஹ் முதல் வானத்துக்கு எறங்கி வரலன்னு குஃப்ர் தனமா பேசுறதயும், ஸஹாபாக்கள திட்டுறதையும் வச்சுப் பாத்தா மறுமைநாள நம்பாத மாதிரி தெரியுது. அதுனால மறுமைய நம்பாத அவரு அல்லாஹ்வின் சாபத்த கேக்கக்கூட தயங்க மாட்டாருன்னு சொல்றாங்க.

அப்புடிப்போடுங்க. சரி சரி நேரமாயிடுச்சு. பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 09.06.2007

Saturday, June 09, 2007

பிஜேபியின் பாணியில் பிஜே

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இல்லாததை இருப்பதாக மிகைப்படுத்துவதும், இருப்பதை இல்லாததாக இருட்டடிப்பு செய்வதும் பிஜேபியின் பிரதான வேலை.
இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக படம் காட்டியும், உண்மையில் இருந்த பாப்ரி மஸ்ஜிதை இல்லாமலாக்கியதும் அவர்களின் முக்கியமான திருப்பணிகள்.

பிரித்தாளும் பார்ப்பனிய ஜெயலலிதாவின் பணப்பெட்டிக்கு தனது இறைவிசுவாசத்தை அடகு வைத்த பிஜே தற்சமயம் அதே பார்ப்பனிய பிஜேபி வழியில் தனது பயணத்தை தொடருகிறார்.

வரலாற்று திரிபு என்பது அவாள்களுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன? இதோ அவாள்களின் பாதையில் அண்ணனும் துவங்கி விட்டார் பாருங்கள்.

களவாடிச் சென்ற பத்திரிக்கையில் கடந்த வாரம், முதல்வரின் சமீபத்திய இஸ்லாமிய இலக்கிய கலை மன்றத்தில் ஆற்றிய உரை பற்றிய செய்தி கட்டுரையை இடம் பெறச் செய்துள்ளார்.

அதில், இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதற்கான காரணம் அவருடைய கட்சி நடத்திய கும்பமேளா என கூசாமல் புளுகியுள்ளார்.

தமுமுக தனது முதல் மாநாட்டை நடத்தியபோதே அறியப்பட்ட முஸ்லிம்களுக்கு தனிஇட ஒதுக்கீடு எனும் தாரக மந்திரம் பட்டி தொட்டி எங்கும் பரவி, 1999இல் சென்னை சீரணி அரங்கிலே தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் சமுதாய சொந்தங்களை சங்கமிக்கச் செய்தது.

அன்று கூடிய அந்த சங்கமம், ஆட்சியாளர்களை அசைத்துப் பார்த்தது. ஏகடியம் பேசியவர்கள், எள்ளி நகையாடியவர்கள் அத்தனை பேரையும் அசர வைத்தது. தமிழகத்திலே ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது.

அதேபோல், 2004 மார்ச்சில், தமுமுக நடத்திய இடஒதுக்கீட்டு பேரணி தஞ்சையை மட்டுமல்ல, தலைநகர் டில்லியையே குலுக்கியது. ஆம். மத்தியில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலியது. இன்னும் சொல்லப்போனால், சமீபத்தில் 2007 மார்ச் இல் டில்லியில் தமுமுக நடத்திய பேரணியும் சமூக நீதி மாநாடும் அகில இந்தியாவே ஆச்சரியப்படும் வகையில் சரியான திட்டமிடுதலுடன் கட்டுக் கோப்பாக நடைபெற்றதை கண்டு வியந்தது. அதன் பயனாக பிரதமரும் வழிகாட்டும் இடத்தில் அமர்ந்துள்ள காங்கிரஸ் தலைவியும் தமுமுக தலைவரை அழைத்து இட ஒதுக்கீட்டிற்கான உறுதிமொழி தந்துள்ளனர்.

இவ்வாறாக, தமுமுகவின் கட்டுக்கோப்பான செயல்பாடு, சமுதாயத்தின் நாளைய தேவைக்கு அவசியமான இடஒதுக்கீட்டை பெறுவதற்கான நெடும் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் வேளையில், இத்தகைய வரலாற்று பதிவுகளை புறம்தள்ளி, தான் கூலிக்கு கூட்டி வந்து கூத்தடித்த கும்பமேளாவால் தான் இத்தனையும் சாத்தியமாயிற்று என கூச்ச நாச்சமில்லாமல் புளுகுவதன் காரணம் என்ன?

உண்மையில் இவர் கும்பகோணத்தில் அடித்த கூத்துக்கு கிடைத்த ஆதரவு ஆளும் கட்சி எதிர்கட்சியான வளர்ச்சி தான் (?).

கடலூரில் ஏற்பட்டது போல், ஆங்காங்கே கட்சி கலகலத்து வருவதால், வரலாறு அறியாத விசிலடிச்சான் குஞ்சுகளான தனது அடிவருடிகளை திருப்திப்படுத்த தன்னால் முடிந்தவரை புளுகிப்பார்க்கிறார்.

அந்தோ பரிதாபம். இந்திய வரலாற்றில் பிஜேபி ஓரம் கட்டப்பட்டது போல், தமிழக முஸ்லிம்களுக்கு ஊறு விளைவிக்கும் இந்த உலவியும் ஓரம் கட்டப்படும் நாள் தொலைவில் இல்லை.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 07.06.2007

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டு ஆயத்த வேலைகள் ஆரம்பம்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்வு குறித்து தமிழக முதல்வரின் டெல்லி பயணத்திற்கு பிறகு எதிர்வரும் வாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் இல்லத்தில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடையூறுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது நாம் அறிந்தே.


தற்போது தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதில் மிகவும் பிற்பட்ட சமூகத்தினருக்கு 30 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்களுக்கு மிகவும் பிற்பட்ட சமூகத்தினரின் (எம்.பி.சி) 30 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமும், கிறிஸ்துவ மற்றும் இதர சிறுபான்மையினருக்கு பிற்பட்ட (பிசி) வகுப்பினரின் 20 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமும் எடுத்து தனி இடஒதுக்கீடு வழங்க முடியுமா? என தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.


எனவே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சினை குறித்து விவாதிக்கலாமா? என்றும் அரசு பரிசீலித்து வருகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒரு மித்த கருத்து ஏற்பட்டால் தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தனி இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றலாமா? என்றும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.


குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி புது டெல்லி செல்ல இருப்பதால் எதிர்வரும் வாரத்திற்குப் பிறகு முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Saturday, June 02, 2007

ஜித்தா கடற்கரையில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு