தவ்ஹீத் வியாபாரி பிஜேயின் புதிய பரிணாமம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் தலைவர் கிரிமினல் பிஜேவை அவரது முன்னாள் சகா அபூஅப்துல்லாஹ் அவர்கள், 'தவ்ஹீத் வியாபாரி' என செல்லமாக அழைப்பதுண்டு.
அந்த தவ்ஹீத் வியாபாரி பிஜே தனது சொந்த கருத்துக்களை, யூத கிருத்துவ இஸ்ராயிலியாத்துகளை இடைச் செருகல் செய்து வெளியிட்ட தர்ஜமாவின் இலட்சணத்திலிருந்து அவரது இலட்சியம், இலட்சக்கணக்கான பொருளாதாரம் மட்டுமே, அல்லாமல் தவ்ஹீத் கொள்கை எல்லாம் ஒன்றும் கிடையாது என பலர் புரிந்து கொண்டனர்.
அடுத்த அவதாரமாக, தேர்தலை முன்னிட்டு பக்கா அரசியல்வாதியாக மாறி, தேர்தல் விளம்பரங்கள், தேர்தல் கால கூட்டங்களுக்கான சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் இத்யாதி இத்யாதி என தனது பினாமி மைத்துனன் பெயரில் துடிப்பான வியாபாரத்தை மேற்கொண்டார்.
எதிர்வரும் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு, மற்றுமொரு தொழிலைத் துவங்கியுள்ளார் தவ்ஹீத் வியாபாரி பிஜே.
இலாப நோக்கோடு செய்யப்படும் எந்த காரியத்தையும், தனக்கு சம்பந்தமில்லாமல் காட்டிக் கொள்வதில் சமத்தானவர். அதேபோல் ஏதேனும் சிக்கல் வந்தாலும் அதிலும் சுற்றி இருப்பவர்களை சிக்க வைத்து தான் மட்டும் தப்பித்துக் கொள்ளும் சதிகாரர். தன்னுடைய சுய இலாபத்திற்காக, தன்னை ஏற்றுக் கொண்டவர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுக்கும் உளுத்தர்.
தற்சமயம் சன் காலண்டர் என்ற பெயரில் காலண்டர் கேக்குகள் விற்பனை செய்யப்படுவதாக களவாடிய உணர்வு பத்திரிக்கையில் விளம்பரம் செய்துள்ளார். அதில் ததஜ மௌலவிகளால் சரிபார்க்கப்பட்டது என்ற குறிப்பு வேறு.
ததஜ மௌலவிகள் 'சரிபார்த்த' குர்ஆன் தர்ஜமாவின் இலட்சணமும், ஜகாத் ஓர் ஆய்வு - தொகுப்பின் இலட்சணமும் சிரிப்பாய் சிரித்து சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், சன் காலண்டரில் மட்டும் என்ன முறையாகவா இருக்கும். என்றாலும், இதில் உள்ள குறைகளை எவரும் பட்டியலிடும் முன் 2007 ஐயே கடந்து விடலாம். மொத்தமாக ஒரு தொகையை சுருட்டி விடலாம் என எண்ணுகிறார் போலும்.
அதுவும் சரிதான். எதிர் கேள்வி கேட்காமல், எதைக் கொடுத்தாலும் சுமந்து திரியும் கூட்டம் கிடைத்திருக்கும் போது தவ்ஹீத் வியாபாரி இன்னும் எத்தனை அவதாரம் வேண்டுமானாலும் எடுப்பார்.
இஸ்லாமிய சிந்தனையோடு எதிர்கேள்வி கேட்கும் தரமான தவ்ஹீத்வாதிகள் தமுமுகவிலேயே தங்கி விட்ட காரணத்தால், இடிப்பார் இல்லாத ஏமரா மன்னனாய் தறி கெட்டு அலையும் தவ்ஹீத் வியாபாரி பிஜே திருந்துவதற்கும், சமுதாய சொந்தங்களிடம் சுருட்டிக் கொண்ட டிரஸ்ட்டையும் சொத்துக்களையும் திரும்ப ஒப்படைப்பதற்கும் இறைவன் அருள் புரிவானாக.
இப்னு கவ்ஸ் 31.10.2006