பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த உளறுவாயனுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

உண்மையை மறைத்துக் கூறும் உளறுவாயன் உமர் தனது நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து வந்து மீண்டும் தனது உளறலை கடை விரித்துள்ளார்.
இதுநாள் வரை உறக்கத்தில் தான் இருந்தாரோ அல்லது, தனது கிரிமினல் தலைவன் பிஜே மலேசிய சிறையில் 'உள்ளே – வெளியே' போய் வந்து கொண்டிருந்தது போல், இவரும் எந்த காராகிரகத்திலாவது உடைபட்டுக் கிடந்தாரோ தெரியாது.
விடுதலை வெளியே வந்திருக்கும் உளறுவாயனை முதலில் வரவேற்றுவிட்டு, அவரது உளறல்களின் உண்மை நிலையைப் பார்ப்போம்.
உண்மைக்கும், இவரது மெயிலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இருக்காது என்பதனை நாம் பலமுறை சுட்டிக்காட்டி வந்ததையும், அதன் காரணமாக தனது மெயிலின் முகப்பு வரியான, 'எமது மெயிலைப் பாhவையிடும் பல்லாயிரக்கணக்கான சகோதரர்களுக்கு' என பந்தா காட்டியவர் பல்லாயிரக்கணக்கை கைவிட்டு வெறுமனே சகோதரர்களுக்கு என்று மாற்றிக் கொண்ட விபரத்தையும் நமது வாசகர்கள் நன்கு அறிவார்கள்.
உளறுவாயனின் நீண்ட நாட்களுக்குப் பின்னான லேட்டஸ்ட் மெயில், 'ததஜவின் மலேசியன் தூதரகம் முற்றுகைப் போராட்டம்'.
உளறுவாயன் மட்டுமல்ல கிரிமினல் தலைவன் பிஜேயின் பின்னால் செல்லும் அடிவருடிகள் எவருக்கும் கூட எள்ளளவும் சிந்திக்கும் திறன் கிடையாது என்பதனை பட்டவர்த்தனமாக மீண்டும் ஒரு முறை தமிழக முஸ்லிம்களுக்கு படம் பிடித்து காட்டியுள்ளது இவர்களின் செயல்பாடு.
முதலாவதாக, சென்னையில் மலேசியாவிற்கான தூதரகம் கிடையாது. சென்னையில் இருப்பது துணைத்தூதரகம் மட்டுமே. மேலும் அதனை முற்றுகை இட்டதாக இங்கே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம் செய்யத்தான் கூடினார்கள்.
அதுவும் எந்த சமயத்தில் என்று பார்க்கும் பொழுது தான் இவர்களின் வீரமும், தமிழக முஸ்லிம்களை முட்டாள்களாக எண்ணிக் கொண்டிருக்கும் இவர்களின் தரங்கெட்ட அரசியல்வாதியின் குணமும் வெட்ட வெளிச்சமாகிறது.
மலேசியாவில் தறுதலை ததஜவின் கிரிமினல் தலைவன் பிஜே கடந்த 19 ஆம் தேதி கைது செய்யப்படுகிறார். பின்னர் தனி நபர் ஜாமீன் மூலம் (தனி நபர் ஜாமீன் கொடுத்தது தறுதலை ததஜவைச் சேர்ந்த எவருமல்ல. மாறாக ஒரு காவல்துறை உயரதிகாரி தான், தனது சொந்த ஜாமீனில்) வெளியே விடப்படுகிறார். அதுவும் பிரச்சாரம் எதிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் வெளியில் விடப்படுகிறார்.
எதற்காக கைது செய்யப்பட்டார்?
உளறுவாயன் உமர் புலம்பியுள்ள காரணங்களுக்காகவா? இல்லை. இதற்கு முன் துபாய், கத்தார், இலங்கையில் கைது செய்யப்பட்டாரே அந்த காரணங்களுக்காகவா?
தறுதலை ததஜ எப்பொழுது உதயமானது? மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இருந்து கொண்டு இனி நமது சொந்த சரக்குகளை தவ்ஹீதின் பெயரால் விற்பனை செய்ய முடியாது. அதற்கென அடிமுட்டாள்களைக் கொண்ட இயக்கத்தை ஏற்படுத்தி அதற்கு தலைவராக தானே முடிசூட்டிக் கொண்டால் மட்டுமே அது சாத்தியம் என்ற சிந்தனை கிரிமினல் பிஜேயின் முளையில் முளைத்ததால் ததஜ எனும் தறுதலை கூட்டம் உதயமானது.
2004 இல் சமுதாயத்தை கூறுபோட்டு, தவ்ஹீதின் பெயரால் தக்லீதை பின்பற்றும் படி தனது அடிவருடிகளுக்கு அறிவுரை கூறினார். அப்படி ஒரு ஆட்டு மந்தை கிடைத்த களிப்பில் அதுவரை போதித்து வந்த தவ்ஹீதின் பரிணாமம் தக்லீத் ஆனது. குஷியாகிப் போன கிரிமினல் தலைவன் பிஜே, இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையான ஜகாத்தை மறுத்தார். தொண்டரடிப் பொடியினர் (உளறுவாய் உமர் உட்பட) ஜால்ரா அடித்தனரே அல்லாமல் தட்டிக் கேட்க வில்லை. அடுத்தபடியாக உத்தம சத்திய ஸஹாபாக்களை கேவலமான வார்த்தைகளால் வர்ணித்தார். ரசிகர் கூட்டம் விசிலடிக்காத குறையாய் விழுந்து விழுந்து ரசித்தனர். ஆணவப் போக்கின் உச்சகட்டமாக அல்குர்ஆனில் தனது கருத்துக்களை நுழைக்கவும் அஞ்சவில்லை.
இப்படிப்பட்ட ஒருவரை சிவப்புக் கம்பளம் விரித்தா வரவேற்பார்கள்?!
தனது சொந்த கட்சியை வளர்ப்பதற்காகவும், தனக்கென சில்லறை சேர்ப்பதற்காகவும் துபாய் உள்ளிட்ட அமீரகத்திற்கு விஜயம் செய்தார். இவரின் சமீபகால இஸ்லாமிய விரோத போக்கு ஆதாரத்துடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் அமீரக அவ்காப் இவர் அங்கு பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்தது. ஒளிந்து மறைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து விட்டு தாயகம் திரும்பினார்.
அமீரகத்திலிருந்து கத்தார் சென்றார். கத்தாரில் தற்சமயம் வாழ்ந்து வரும் சமகால இஸ்லாமிய அறிஞரான யூஸுஃப் காளாவியை லூசு என கேலி பேசியது முதல் முன் பத்திகளில் விவரிக்கப்பட்டிருந்த இவரது சமகால நடவடிக்கைகள் அங்கும் ஆவணங்களாக தொகுக்கப்பட்டிருந்ததால், இங்கு மீண்டும் கால் வைக்கக் கூடாது என்ற சிவப்பு முத்திரையுடன் சிறீலங்கா பயணமானார்.
அங்கும் இவரது சமீபகால உரைகள் ஜகாத் தொடங்கி சகலமும் தொகுக்கப்பட்டு தொங்க விடப்பட்டதால் தொங்கிய முகத்தோடு மேடையேறி ஆவேசத்தில் ஆண் பெண் ஆடை அளவுகளில் வரம்பு மீறி வார்த்தைகளை விட்டார். உடனடியாக கைது செய்யப்பட்டு அங்கும் மீண்டும் நுழையக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் ஊருக்கு திரும்பினார்.
இவையெல்லாம் கடந்த ஒன்றிரண்டு வருடங்களில் நடைபெற்ற சம்பவங்களாகும்.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் உளறுவாய் உமர் போன்றவர்கள் சமீபகாலமாக நடைபெற்றவைகளை உணர்ந்து கொள்ள முடியாமல் 1980 – 90 களின் தாக்கத்திலேயே மயங்கிக் கிடக்கின்றனர்.
அதனால் தான் மலேசியா உள்ளிட்ட நான்கு நாடுகளிலும் தறுதலை ததஜவின் தலைவன் கிரிமினல் பிஜே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டது ஏதோ அந்நாடுகள் அஞ்ஞானத்தில் மூழ்கி திளைத்து தவ்ஹீதிற்கு எதிரான நடவடிக்கை எடுத்தது போல் பில்ட் அப் செய்து பார்க்கின்றனர்.
உண்மையில் தவ்ஹீதின் எதிரி இந்த நாட்டு அரசுகளல்ல. மாறாக கிரிமினல் தலைவன் பிஜே தான் என்பதை தமிழகம் மட்டுமல்ல இலங்கை, ஐக்கிய அமீரகம், கத்தார், மலேசியா, சிங்கப்பூர் வாழ் முஸ்லிம்கள் அனைவரும் பிஜே மலேசியாவில் கைது செய்யப்பட்டதன் மூலம் அறிந்து கொண்டனர்.
ஆனால் உளறுவாய் உமர் முழு பூசணிக்காயையும் தனது வாயில் மறைக்கப்பார்க்கிறார்.
கிரிமினல் பிஜேவின் கைதுக்கு பின்னணியாக அவரது சொந்த செயல்பாடுகளே (கருத்துக்களே) வரிசையில் நிற்க, இதற்கு காரணமானவர்கள் என்று தமுமுகவை சுட்டிக்காட்ட எண்ணிய உளறுவாயன் தனது வழமைப்படி உளறியுள்ளதை கவனியுங்கள்.
'இதன் காரணத்தால் நம்மாள் ஓரங்கட்டப்பட்ட நம்மைப் போன்ற ஒருவர் இந்தளவுக்கு சாதனைகள் செய்வதா? என்கிற பொறாமை ஏற்பட்டு அவரைப் பழிவாங்க காத்துக் கிடந்தவர்கள் தங்களது பேராவலை பூர்த்தி செய்வதற்காக இன்னும் பிற அமைப்புகளுடனும் கைகோர்த்து களமிறங்கி மலேசிய மத்ஹபுவாதிகளை தூண்டிவிட்டு மலேசிய காவல் துறைக்கு தகவல் தரப்பட்டு மூதறிஞர் பிஜே அவர்கள் போலீஸ் விசாரணையில் ஒருநாள் முழுவதும் உட்படுத்தப் பட்டார்கள்'.
'தகவலறிந்த தவ்ஹீத் சகோதரர்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர்
தமிழ்நாட்டில் உள்ள மலேசியன் எம்பஸியை அநீதியை எதிர்த்து முற்றுகையிட்டனர். இது செய்தி அறிந்த மலேசிய அரசு மூதறிஞர் பிஜே அவர்களை விடுவித்து தாயகத்திற்கு அனுப்பி வைத்தது'.
இந்த பத்தியில் உளறுவாயன் எழுதியுள்ளதை மீண்டும் வாசித்துப் பார்த்தால், எழுதிய உளறுவாயனே குழம்பிப் போவார் என்பது திண்ணம்.
நம்மால் ஒரங்கட்டப்பட்ட நம்மைப் போன்ற ஒருவன்
தமுமுகவிலிருந்து வெளியே வந்து வீராவேசம் கொண்டு உரையாற்றிய தானைத் தலைவன் கிரிமினல் பிஜே, 'தமுமுக அரசியலின் பக்கம் சாய்வதால், தவ்ஹீதிற்கு அங்கு இடமில்லை. எனவே தவ்ஹிதை தாங்கிப் பிடிக்க தமுமுகவை உதறிவிட்டு வந்தேன்' என்று தான் திருவாய் மலர்ந்தருளினார்.
ஆனால் உளறுவாயனோ, பீஜே ஒரங்கட்டப்பட்டதால் தான் ததஜவை ஆரம்பித்தார் என்று புதிய உண்மையைப் போட்டு உடைக்கிறார்.
இந்த அளவுக்கு சாதனைகள் செய்வதா? என்ற பொறாமை ஏற்பட்டு .. .. ..
சத்தியமாக உளறுவாயனுக்கு சிந்திக்கும் திறனில்லை என்பதனை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்.
இஸ்லாமிய மார்க்கத்தை திரித்தும் வளைத்தும் பேசியதற்காக ஒன்றல்ல, நான்கு நாடுகளில் நுழைவதற்கே தடை செய்யப்பட்ட விஷயத்தை சாதனையாக கருதுவாரானால் அவருக்கும் இஸ்லாத்திற்குமுள்ள இடைவெளியைப் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் விலகி விட்ட உளறுவாயன் முன்னாலும் பின்னாலும் மூடிக் கொண்டு தான் இதுவரை அடங்கி கிடந்த கபுரிலேயே அடைக்கலமாவது உத்தமமாகும்.
பிஜே போலீஸ் விசாரணையில் ஒரு நாள் முழுக்க உட்படுத்தப்பட்டார்.
இதுவும் தவறான தகவலாகும். ஒரு நாளல்ல. 19 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை காவல் துறை மற்றும் இஸ்லாமிய சமய விவகாரத் துறையினரின் அடுத்தடுத்த விசாரணைக்கும் இடையிடையே சிறைவாசத்திற்கும் உட்படுத்தப்பட்டார் என்பதுவே உண்மையாகும்.
ததஜவினரின் முற்றுகை செய்தியை அறிந்த மலேசிய அரசு பிஜேயை விடுவித்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டது போல் தறுதலை ததஜவினர் தங்களது ஆர்ப்பாட்டத்திற்கு தேர்ந்தெடுத்த நேரம் தான் இவர்களை கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதிகளாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
மலேசியன் ஏர்வேய்ஸ் விமானத்தில் கிரிமினல் தலைவன் பிஜே ஏற்றி வைக்கப்பட்டதன் பின் தான் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த கூட்டமும் கூட, அரசியல்வாதிகளை வரவேற்கவும், வழி அனுப்பவும் திரட்டப்படும் குண்டர் அணியினரைப் போல கூட்டப்பட்டது. விமான நிலையத்தில் வரவேற்பளிக்க வாருங்கள் என கோரிக்கை வைத்தால் ஒருவரும் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள் என்பதால் மலேசிய அரசு பிஜேயை வீணான புகாரின் பேரில் கைது செய்துள்ளது என்ற அனுதாப அலையை (அரசியல்வாதிகளைப் போல்) உருவாக்கி ஆதாயம் தேடவும், அவ்வாறு கூடுபவர்களை தங்களது வழக்கப்படி வேன் ஏற்பாடு செய்து விமான நிலையத்தில் மாஸ்ஐக் காட்டி பேரம் பேசவும் கூட்டப்பட்டது.
விபரமறியா அப்பாவிகள் அனுதாபப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்போய், ஏர்போர்ட்டுக்கு இழுத்தடிக்கப்பட்டு அல்லல்பட்டு தீரும்பியுள்ளனர்.
ஆக, மலேசிய அரசு இங்கு அனுதாபத்தில் கூடியவர்களைக் கண்டு மிரளவுமில்லை. அதனால் பிஜே விடுதலை செய்யப்படவில்லை. மாறாக, பிஜே விடுதலையான பின்னர் தான் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதுவும் அரசியல்வாதியாக கிரிமினல் பிஜே அவதாரம் எடுப்பதற்காகத்தான்.
ஆக, உண்மையை மறைத்தே பழக்கப்பட்ட உளறவாயன் நாம் எழுதியுள்ளதை மறுக்கும் துணிவிருந்தால் ஆதாரத்தோடு மறுக்கட்டும். இல்லையேல் மூடிக் கொண்டு குழியில் அடங்கியே இருக்கட்டும்.
வஸ்ஸலாம்
ராவுத்தர் 26.08.2007